Seo Services
Results for நாட்டிற்காக ஒன்றிணைவோம்

Bepost.lk மூலம் நம் உள்ளூர் உற்பத்திகளை நாமே நிகழ்நேரத்தில் (Online) விற்பனை செய்யலாம்..........!!!!!!

6/10/2019 04:40:00 pm

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாட்டுக்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் அஞ்சல் திணைக்களம் Bepost திட்டத்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உள்ளூர் உற்பத்தி பொருட்களை நிகழ்நேர (Online) விற்பனை மூலம் விற்பனை செய்தலே Bepost திட்டத்தின் நோக்கமாகும்.

இவ் இணையத்தளத்தின் மூலம் எமது உற்பத்திகளை பதிவு செய்து விற்பனையை அதிகரிக்க முடியும்.

உங்கள் உற்பத்திகளை பதிவு செய்ய அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்குச் செல்லுங்கள்.


Bepost.lk மூலம் நம் உள்ளூர் உற்பத்திகளை நாமே நிகழ்நேரத்தில் (Online) விற்பனை செய்யலாம்..........!!!!!! Bepost.lk மூலம் நம் உள்ளூர் உற்பத்திகளை நாமே நிகழ்நேரத்தில் (Online) விற்பனை செய்யலாம்..........!!!!!! Reviewed by Mankulam News on 6/10/2019 04:40:00 pm Rating: 5

திருமுறிகண்டியில் குடிநீர் விநியோக தாங்கி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது

6/08/2019 06:58:00 pm

கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சியில் ஒன்றாக திருமுறிகண்டி குடிநீர் விநியோகம் செய்ய தண்ணீர் தாங்கி மற்றும் பைப் வேலை என்பன கடந்த 07-06-2019 பிரதேச செயலாளர் மற்றும் ஜனாதிபதி செயலக உத்யோகத்தரால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திருமுறிகண்டியில் குடிநீர் விநியோக தாங்கி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது திருமுறிகண்டியில் குடிநீர் விநியோக தாங்கி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது Reviewed by Mankulam News on 6/08/2019 06:58:00 pm Rating: 5

நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட செயலமர்வு - மு/மாங்குளம் ம.ம.வி

6/08/2019 05:11:00 pm

முல்லைத்தீவு மாவட்டத்தில் 'நாட்டிற்காக ஒன்றிணைவோம்' செயற்றிட்டத்தில், பாடசாலைகளில் மாணவர்களின் மென்திறன்களை வளர்த்தெடுப்பதற்கான செயலமர்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டன.

அந்த வகையில் துணுக்காய் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.சஞ்சீவன் அவர்களின் ஏற்பாட்டில் மு/மல்லாவி மத்திய கல்லூரி, மு/மாங்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் தரம் - 10, 11 மாணவர்களுக்கான செயலமர்வுகள் மு/மல்லாவி மத்திய கல்லூரி, மு/மாங்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடைபெற்றன.


துணுக்காய் பிரதேச செயலக மேற்பார்வையில் நடைபெற்ற இச்செயலமர்வின் வளவாளர்களாக உள மகிழ்வூட்டும் இல்லத்தின் முதன்மை வளவாளர்களான திரு.நா.கு. மகிழ்ச்சிகரன், திரு.சு. இக்னேசியஸ் கிளனி ஆகியோர் கலந்து கொண்டனர்.





நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட செயலமர்வு - மு/மாங்குளம் ம.ம.வி நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட செயலமர்வு - மு/மாங்குளம் ம.ம.வி Reviewed by Mankulam News on 6/08/2019 05:11:00 pm Rating: 5

நாட்டிக்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் மரக்கன்றுகள் நாட்டிவைப்பு......!!!!

6/06/2019 07:14:00 pm
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதியின் "நாட்டுக்காக ஒன்றிணைவோம் "நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நான்காம் நாள் நிகழ்வுகள் மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன...
அந்த வகையில் நகர்புறத்தை அழகுபடுத்தல் சூழலை பாதுகாப்போம் என்ற  கருப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஊட்டும் வகையில் முல்லைத்தீவு நகர்பகுதியில் முதன்மை வீதிகளின் இரு மருங்குகளிலும் மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நகர்பகுதியிலிருந்து மாங்குளம் வீதியிலும், முல்லைத்தீவு பரந்தன் வீதியின் இருமருங்கிலும் 152 மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டுள்ளன.
இந்த மரநடுகை நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஜனாதிபதி செயலக அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், காணிப்பயன்பாட்டு அதிகாரிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் முல்லைத்தீவு மகாவித்தியாலய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் 59 ஆவது படைப்பிரிவினை சேர்ந்த படையினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு இந்த மரக்கன்றுகளை நாட்டிவைத்துள்ளார்கள்
நாட்டிக்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் மரக்கன்றுகள் நாட்டிவைப்பு......!!!! நாட்டிக்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் மரக்கன்றுகள் நாட்டிவைப்பு......!!!! Reviewed by Mankulam News on 6/06/2019 07:14:00 pm Rating: 5

முல்லைத்தீவில் மாற்று வலுவுடையோருக்கான உதவிகள் வழங்கி வைப்பு!

6/06/2019 06:57:00 pm

ஜனாதிபதியுடைய எண்ணக்கருவில் உருவாகிய "நாட்டுக்காக ஒன்றினைவோம்" வேலைத்திடடத்தில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று (2019-06-05) புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுள்ளன.

அந்த வகையில் நாட்டுக்காக ஒன்றினைவோம் வேலைத்திட்டத்தில் ஒரு அங்கமாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீர் சுத்திகரிப்பு தொகுதி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச சமூக சேவைகள் உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியுடைய மேலதிக செயலாளர் ரோஹன அபேரத்ன, ஜனாதிபதி செயலகத்தின் உதவிச் செயலாளர் லலித் பண்டார, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமாகிய ச சத்தியசுதர்ஷன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த. அகிலன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இ.ரமேஷ், உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை நெறிகளுக்கான சிரேஷ்ட விரிவுரையாளர் சி. ரகுராம் கலந்துகொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விளக்கங்களை அளித்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் மாற்று வலுவுடையோருக்கான உதவிகள் வழங்கி வைப்பு! முல்லைத்தீவில் மாற்று வலுவுடையோருக்கான உதவிகள் வழங்கி வைப்பு! Reviewed by Mankulam News on 6/06/2019 06:57:00 pm Rating: 5

முல்லைத்தீவில் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டத்தில் பத்தாயிரம் பேர் நண்மை!

6/05/2019 11:06:00 pm

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று ஆரம்பமான ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ எனும் தொனிப்பொருளிலான தேசிய வேலைத் திட்டத்தின்; முதல் நாள் நிகழ்வில் 150 வேலைத்திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதற்காக சுமார் 3.43 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இதன் மூலம் நன்மையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத் திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தகவல் அறிவித்தார்.
இச்சந்திப்பு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.
‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத் திட்டம் எதிர்வரும் எட்டாம் திகதி வரையில் முலi;லத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலகங்களில் இடம்பெறும்.
முல்லைத்தீவில் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டத்தில் பத்தாயிரம் பேர் நண்மை! முல்லைத்தீவில் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டத்தில் பத்தாயிரம் பேர் நண்மை! Reviewed by Mankulam News on 6/05/2019 11:06:00 pm Rating: 5
ads 728x90 B
Powered by Blogger.