முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் வடக்கு மாகாண சபையின் 1.5 மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட பனிக்கன்குளம் " முதியோர் பகல் பராமரிப்பு " நிலைய கட்டட திறப்பு விழா சிறப்புற இடம்பெற்றுள்ளது
ஒட்டுசுட்டான் பிரதேச சமூகசேவைகள் உத்தியோகத்தர் திரு.ச.சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திரு.த.அகிலன் அவர்கள் கட்டிடத்திற்கான பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து வைத்ததை தொடர்ந்து வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகா பணிப்பாளர் வனஜா செல்வரத்தினம் அவர்கள் கட்டடத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்வில் மாங்குளம் பங்குத்தந்தை மரியதாஸ் அடிகளார் , வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் வனஜா செல்வரத்தினம் , ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திரு.த.அகிலன் முல்லைத்தீவு மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் தசரதராஜகுமாரன் , பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் , கிராம அலுவலர் அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகள் முதியவர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது குறித்த முதியோர் சங்கத்தில் அங்கத்தவர்களுக்கான நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் விருந்தினர்களுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாங்குளம் பனிக்கன்குளம் முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு......!!!
Reviewed by Mankulam News
on
3/28/2019 05:17:00 pm
Rating:
No comments: