Seo Services

முல்லைத்தீவில் மாற்று வலுவுடையோருக்கான உதவிகள் வழங்கி வைப்பு!


ஜனாதிபதியுடைய எண்ணக்கருவில் உருவாகிய "நாட்டுக்காக ஒன்றினைவோம்" வேலைத்திடடத்தில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று (2019-06-05) புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுள்ளன.

அந்த வகையில் நாட்டுக்காக ஒன்றினைவோம் வேலைத்திட்டத்தில் ஒரு அங்கமாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீர் சுத்திகரிப்பு தொகுதி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச சமூக சேவைகள் உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியுடைய மேலதிக செயலாளர் ரோஹன அபேரத்ன, ஜனாதிபதி செயலகத்தின் உதவிச் செயலாளர் லலித் பண்டார, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமாகிய ச சத்தியசுதர்ஷன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த. அகிலன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இ.ரமேஷ், உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை நெறிகளுக்கான சிரேஷ்ட விரிவுரையாளர் சி. ரகுராம் கலந்துகொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விளக்கங்களை அளித்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் மாற்று வலுவுடையோருக்கான உதவிகள் வழங்கி வைப்பு! முல்லைத்தீவில் மாற்று வலுவுடையோருக்கான உதவிகள் வழங்கி வைப்பு! Reviewed by Mankulam News on 6/06/2019 06:57:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.