முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று ஆரம்பமான ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ எனும் தொனிப்பொருளிலான தேசிய வேலைத் திட்டத்தின்; முதல் நாள் நிகழ்வில் 150 வேலைத்திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதற்காக சுமார் 3.43 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இதன் மூலம் நன்மையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத் திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தகவல் அறிவித்தார்.
இச்சந்திப்பு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.
‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத் திட்டம் எதிர்வரும் எட்டாம் திகதி வரையில் முலi;லத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலகங்களில் இடம்பெறும்.
‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத் திட்டம் எதிர்வரும் எட்டாம் திகதி வரையில் முலi;லத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலகங்களில் இடம்பெறும்.
முல்லைத்தீவில் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டத்தில் பத்தாயிரம் பேர் நண்மை!
Reviewed by Mankulam News
on
6/05/2019 11:06:00 pm
Rating:

No comments: