முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதியின் "நாட்டுக்காக ஒன்றிணைவோம் "நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நான்காம் நாள் நிகழ்வுகள் மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன...
அந்த வகையில் நகர்புறத்தை அழகுபடுத்தல் சூழலை பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஊட்டும் வகையில் முல்லைத்தீவு நகர்பகுதியில் முதன்மை வீதிகளின் இரு மருங்குகளிலும் மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நகர்பகுதியிலிருந்து மாங்குளம் வீதியிலும், முல்லைத்தீவு பரந்தன் வீதியின் இருமருங்கிலும் 152 மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டுள்ளன.
இந்த மரநடுகை நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஜனாதிபதி செயலக அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், காணிப்பயன்பாட்டு அதிகாரிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் முல்லைத்தீவு மகாவித்தியாலய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் 59 ஆவது படைப்பிரிவினை சேர்ந்த படையினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு இந்த மரக்கன்றுகளை நாட்டிவைத்துள்ளார்கள்
நாட்டிக்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் மரக்கன்றுகள் நாட்டிவைப்பு......!!!!
Reviewed by Mankulam News
on
6/06/2019 07:14:00 pm
Rating:
No comments: