Seo Services

நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட செயலமர்வு - மு/மாங்குளம் ம.ம.வி


முல்லைத்தீவு மாவட்டத்தில் 'நாட்டிற்காக ஒன்றிணைவோம்' செயற்றிட்டத்தில், பாடசாலைகளில் மாணவர்களின் மென்திறன்களை வளர்த்தெடுப்பதற்கான செயலமர்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டன.

அந்த வகையில் துணுக்காய் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.சஞ்சீவன் அவர்களின் ஏற்பாட்டில் மு/மல்லாவி மத்திய கல்லூரி, மு/மாங்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் தரம் - 10, 11 மாணவர்களுக்கான செயலமர்வுகள் மு/மல்லாவி மத்திய கல்லூரி, மு/மாங்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடைபெற்றன.


துணுக்காய் பிரதேச செயலக மேற்பார்வையில் நடைபெற்ற இச்செயலமர்வின் வளவாளர்களாக உள மகிழ்வூட்டும் இல்லத்தின் முதன்மை வளவாளர்களான திரு.நா.கு. மகிழ்ச்சிகரன், திரு.சு. இக்னேசியஸ் கிளனி ஆகியோர் கலந்து கொண்டனர்.





நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட செயலமர்வு - மு/மாங்குளம் ம.ம.வி நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட செயலமர்வு - மு/மாங்குளம் ம.ம.வி Reviewed by Mankulam News on 6/08/2019 05:11:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.