முல்லைத்தீவு மாங்குளம் மத்திய மகா வித்தியாலய மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று (2019-06-07) வெள்ளிக்கிழமை காலை 08:15 மாணியளவில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வித்தியாலய முதல்வர் உயர் திரு.த.யோகானந்தராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக துணுக்காய் கல்வி வலய தமிழ் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் கவிதா சந்திரகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மாங்குளம் மத்திய மகா வித்தியாலய வரலாற்றில் முதல் முறையாக இந்த வருடம் சற்று வேறுபட்ட முறையில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
அதாவது சென்ற வருடம் மாணவ தலைவர்களாக பதவிவகித்த மாணவர்களால் நிகழ்வின் கதாநாயகர்கள் பாடசாலையின் பிரதான நுழைவாயிலில் இருந்து பாடசாலையின் மேலைத்தேய மங்கள வாத்திய இசையுடன் பிரதான மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
சிரேஷ்ட மாணவ தலைவர் சந்திரசேகரம் துஷியந்தன்
உதவி மாணவத்தலைவன் சாந்தகுமார் தாஸ்கரன்
சிரேஷ்ட மாணவத்தலைவி சதீஸ்குமார் நிதர்சனா
உதவி மாணவத்தலைவி மஹாலிங்கம் குவேனி
ஆகியோர் உட்பட 21 மாணவ தலைவர்கள் சின்னம் சூட்டி கெளரவிக்கப்பட்டனர்.
குறித்த மாணவ தலைவர்களுக்கு மாங்குளம் நியூஸ் சார்பாகவும் மாங்குளம் நியூஸ் வாசகர்கள் சார்பாகவும் அவர்களது பணியை சிறப்பாக தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.
முல்/மாங்குளம் மத்திய மகா வித்தியாலய மணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு........!!!!!
Reviewed by Mankulam News
on
6/08/2019 09:42:00 pm
Rating:

No comments: