Seo Services
Results for முல்லைத்தீவு

வடக்கு ஆளுநர் தலைமையில் திருக்குறள் பெருவிழா முல்லைத்தீவில் இன்று ஆரம்பம்........!!!

8/23/2019 05:09:00 pm

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் நெறிப்படுத்தலில் வடமாகாணத்தில் முதன்முறை இடம்பெறும் திருக்குறள் பெருவிழா 'தொட்டணைத்தூறும் மணற்கேணி'  என்னும் தலைப்பில் முல்லைத்தீவு ஊற்றுங்கரை சித்திவிநாயகர் ஆலய மண்டபத்தில் வடமாகாண கௌரவ ஆளுநர் தலைமையில் இன்று (23) ஆரம்பமானது.

வடமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இன்றைய நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் திருக்குறள் புத்தகம் மற்றும் திருக்குறள் ஸ்டிக்கர் என்பன வெளியிடப்பட்டதுடன்  நிகழ்வில் கௌரவ ஆளுநரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மாணவர்கள் இருவருக்கு திருக்குறள் படம் ஆளுநர் அவர்களால் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்கள் உரையாற்றுகையில், முல்லை மாவட்டம் தண்ணீரை கடந்து குருதியிலே நடந்து தீயை கண்டு தீண்டாமையை கண்டு இன்னும் வாழமுடியும் என்று சொல்லும் மாபெரும் மாவட்டம்  ஆகும். நான்கு இராணுவங்கள் கடந்து சென்றும் எங்கள் வாழ்க்கையை யாரும் பறித்துக்கொள்ளமுடியாது என்று உலகிற்கு சொல்கின்ற மக்கள் இங்கு இருக்கின்றனர். அதனால் தான் ஜனாதிபதியை மூன்று முறை இந்த மண்ணிற்கு கொண்டுவந்துள்ளேன். முல்லையில் இருக்கும் வேதனையை வெளிப்படையாக சொல்லமுடியாவிட்டாலும் மிகவும் அறிந்தவர் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள். அதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு இருக்கின்றோம் என்றும் கௌரவ ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டார்.

திருவள்ளுவரை பற்றி பல்கலைக்கழகம் அதிகளவில் ஆராயவேண்டும் அதுவே என் வேண்டுகோள்.  நான் அறிந்தவரையில் யாழ் பல்லைக்கழகத்தில் திருவள்ளுவரையோ திருக்குறளையோ பற்றி கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள் இன்றுவரை  யாரும் இல்லை. இது ஒரு மாபெரும் குறை. இந்த விழா முடியும் போது திருக்குறளுக்கான பாடநெறியை பல்கலைக்கழக ரீதியில் முன்வையுங்கள் இதுவே என் வேண்டுகோள். இந்த யோசனையை நான் ஆதரிக்க விரும்புகின்றேன். அதற்கான நிதியைக்கூட நான் தர முன்வருகின்றேன் என்று ஆளுநர் அவர்கள் சுட்டிக்காட்டினார். மேலும் நவம்பர் மாத இறுதியிலே நாங்கள் சர்வதேச தமிழ்தினம் கொண்டாட வேண்டும் என்ற விருப்பம் உண்டு என்றும் கௌரவ ஆளுநர் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வு இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதிவரை வவுனியா (24) , மன்னார் (25), கிளிநொச்சி(26) , தென்மராட்சி (27) ,பருத்தித்துறை பிரதேச செயலகம் (28), இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியிலும் (29) இறுதி நாளான 30ஆம் திகதி யாழ் மாநகரசபை மண்டபத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









வடக்கு ஆளுநர் தலைமையில் திருக்குறள் பெருவிழா முல்லைத்தீவில் இன்று ஆரம்பம்........!!! வடக்கு ஆளுநர் தலைமையில் திருக்குறள் பெருவிழா முல்லைத்தீவில் இன்று ஆரம்பம்........!!! Reviewed by Mankulam News on 8/23/2019 05:09:00 pm Rating: 5

முல்/மாங்குளம் ம.ம.வி பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது........!!!

7/08/2019 02:31:00 pm

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மத்திய மகாவித்தியாலயத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் த.யோகானந்தராஜா தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் விருந்தினராக துணுக்காய் கல்வி வலய கல்வி அபிவிருத்தி பிரதி கல்விப்பணிப்பாளர் திரு பிரதீப் ஆனந்த் மற்றும் துணுக்காய் கல்வி வலய கணக்காளர், மாங்குளம் சித்திவிநாயகர் ஆலய பிரதம சிவாச்சாரியார் மற்றும் தேவன்பிட்டி ரோமன் கத்தோலிக்க பாடசாலையின் பிரதி அதிபர் பங்குதந்தை லெபோன் சுதன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிறேமகாந்த், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முகுந்தகஜன், அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.










முல்/மாங்குளம் ம.ம.வி பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது........!!! முல்/மாங்குளம் ம.ம.வி பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது........!!! Reviewed by Mankulam News on 7/08/2019 02:31:00 pm Rating: 5

மரத்தடி நிழலில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஆளுநர்......!!!

6/27/2019 07:05:00 pm

முல்லைத்தீவு மாங்குளம் கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு கடந்த 24-06-2019 நண்பகல் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் அவர்கள் அங்கு மரத்தடி நிழலில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தனது சிறுவயது பாடசாலைக் காலத்தில் இவ்வாறு மரத்தடியில் கல்விகற்ற அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்ட கௌரவ ஆளுநர் அவர்கள், கல்வியூடாக உலகத்தின் எந்தவொரு  உயரத்தினையும் எட்டிப்பிடிக்க முடியுமெனவும் கல்வியினை இடைவிடாது தொடர்ந்து சமூகத்தில் சிறந்த ஆளுமைகளாக மாறி பாமர மக்களுக்கு உதவி புரிய வேண்டுமெனவும் மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.



மரத்தடி நிழலில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஆளுநர்......!!! மரத்தடி நிழலில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஆளுநர்......!!! Reviewed by Mankulam News on 6/27/2019 07:05:00 pm Rating: 5

முல்லை மாவட்ட நீர்ப்பங்கீடு தொடர்பான விசேட கூட்டம் வடக்கு ஆளுநர் தலைமையில் மாங்குளத்தில்...........!!!

6/27/2019 06:54:00 pm


முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பங்கீடு  தொடர்பான விசேட கூட்டம் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் மாங்குளத்தில் அமைந்துள்ள  வடமாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் தலைமையகத்தில் கடந்த 24 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்றது.

இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில்  வடமாகாணத்தின் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழுள்ள குளங்களிலிருந்து பொதுமக்களுக்கு தேவையான குடிநீரினை பெற்றுக்கொள்வதற்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து முல்லைத்தீவு மாவட்ட கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும், நீர்ப்பாசன பொறியியலாளர்கள் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர்களுக்கும் கௌரவ ஆளுநருக்குமிடையில் இதன்போது கலந்துரையாடப்பட்டு சாதகமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், தீர்மானங்களெதுவும் மேற்கொள்ளாது வெறுமனே கலந்துரையாடல்களுடன் முடிவுபெறும் கூட்டங்களில் கலந்துகொள்வதிலும் பார்க்க இவ்வாறு மக்களுக்கு பயனுள்ள தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய கூட்டங்களில் கலந்து கொள்வதற்கே விரும்புவதாக குறிப்பிட்டார். 

இதேவேளை பறங்கியாற்றிலிருந்து வீணாக வெளியேறும் நீரினை தடுத்து வவுனிக்குளத்திற்கு திருப்புவதன் ஊடாக மாந்தை கிழக்கு மக்களின் குடிநீர்த் தேவையினை உடனடியாக பூர்த்திசெய்ய முடியுமென்றும் அவ்வாறு வீணாக வெளியேறும் நீரினை பறங்கியாற்றின் சிறாட்டிக்குளம் பகுதியில் தற்காலிக அணையொன்றினை உருவாக்குவதன் மூலம் சேமித்து  மக்களின் குடிநீர் தேவையினைபூர்த்தி செய்வதற்கு உடனடியாக நான்கு இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். உடனடியாக இது தொடர்பில் பொறியியலாளர்களுடன் கலந்துரையாடிய கௌரவ ஆளுநர், பொறியியலாளர் குழுவொன்றை குறித்த பகுதிக்கு அனுப்பியதுடன் அவர்களின் முன்மொழிவுடன் தற்காலிக அணையினை கட்டுவதற்கு உடனடியாக தேவையான நான்கு இலட்சம் ரூபாவினை நேற்று முன்தினம் (25) மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் அவர்களிடம் வழங்கி வைத்தார்.



முல்லை மாவட்ட நீர்ப்பங்கீடு தொடர்பான விசேட கூட்டம் வடக்கு ஆளுநர் தலைமையில் மாங்குளத்தில்...........!!! முல்லை மாவட்ட நீர்ப்பங்கீடு  தொடர்பான விசேட கூட்டம் வடக்கு ஆளுநர் தலைமையில் மாங்குளத்தில்...........!!! Reviewed by Mankulam News on 6/27/2019 06:54:00 pm Rating: 5

உயிரிழை பயனாளிகள் 34 பேருக்கு சிவன் அறக்கட்டளையால் மெத்தைகள் வழங்கிவைப்பு.....!!!

6/21/2019 02:10:00 pm

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் அமையப்பெற்றுள்ள உயிரிழை அமைப்பில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவர்களை சிவன் அறக்கட்டளை ஸ்தாபகரும் மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய திரு.கணேஸ்வரன் வேலாயுதம் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறார்.

அதன் அடிப்படையில் ஒரு பகுதியினருக்கான தண்ணீர் மெத்தைகள் ஏற்கனவே வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது 34 பயனாளிகளுக்கான மெத்தைகள் வழங்கியுதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கான மெத்தைகள் கனடா சிவன் அறக்கட்டளை நிதி அணுசரணையில் கனடா சிவன் அறக்கட்டளை உறுப்பினர்களான திரு.சக்தி, திரு.ச.கிருபாகரன் அவர்களும் சிவன் அறக்கட்டளை ஸ்தாபகர் திரு.கணேஸ்வரன் வேலாயுதம் அவர்களும் வழங்கி வைத்துள்ளார்.
உயிரிழை பயனாளிகள் 34 பேருக்கு சிவன் அறக்கட்டளையால் மெத்தைகள் வழங்கிவைப்பு.....!!! உயிரிழை பயனாளிகள் 34 பேருக்கு சிவன் அறக்கட்டளையால் மெத்தைகள் வழங்கிவைப்பு.....!!! Reviewed by Mankulam News on 6/21/2019 02:10:00 pm Rating: 5

சைக்கிள் ஓட்ட வீராங்கனை றாதிகா - முல்லை மாவட்ட அரச அதிபரினால் கெளரவிப்பு.......!!!

6/19/2019 06:53:00 pm

தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக இடம்பெற்ற பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டியில் வடமாகாணம் சார்பாக பங்குபற்றி இரண்டாம் இடத்தினை பெற்று வடமாகாணத்திற்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த முல்லைத்தீவு , முள்ளியவளையை சேர்ந்த திருமதி.ந.றாதிகா அவர்கள் மாவட்ட செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களால் இன்று கௌரவிக்கப்பட்டார்.
சைக்கிள் ஓட்ட வீராங்கனை றாதிகா - முல்லை மாவட்ட அரச அதிபரினால் கெளரவிப்பு.......!!! சைக்கிள் ஓட்ட வீராங்கனை றாதிகா - முல்லை மாவட்ட அரச அதிபரினால் கெளரவிப்பு.......!!! Reviewed by Mankulam News on 6/19/2019 06:53:00 pm Rating: 5

அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்- மக்கள் பிரதிநிதிகளால் கண்கானிப்பு!!

6/19/2019 02:16:00 pm



முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மருதமடுக் கிராமத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை, வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் நிதி ஒதுக்கீட்டில், மருதமடுக் கிராமத்தில் காணப்படும், மதகுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த வேலைத்திட்டங்கள் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்ட குழுவினர் மக்களுடன் கலந்துரையாடினர்.
ரவிகரனுடன், கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், புதுக்குடியிருப்புப் பிரதேச சபையின் பிரதித் தலைவர் கனகசுந்தரசுவாமி ஜனமேஜயந் உள்ளிட்டவர்கள் சென்றிருந்தனர்.
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்- மக்கள் பிரதிநிதிகளால் கண்கானிப்பு!! அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்- மக்கள் பிரதிநிதிகளால் கண்கானிப்பு!! Reviewed by Mankulam News on 6/19/2019 02:16:00 pm Rating: 5

முல்லைத்தீவில் பயனற்ற வீட்டுத்திட்டம்........!!!

6/14/2019 07:24:00 pm
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 2012ஆம் ஆண்டு அரை ஏக்கர் வீதம் காணி வழங்கப்பட்டு ஒரு லட்சம் ரூபா மானியமாகவும் 2 லட்சம் ரூபாய் கடன் அடிப்படையிலும் வழங்கப்பட்டு அரச உத்தியோகத்தர்கள் 50 பெயருக்கான வீடுகள் அமைக்கப்பட்டன.
குறித்த பகுதியில் வீடுகளை அமைத்து அங்கு குடியேறும் அரச உத்தியோகத்தர்களுக்கான மின்சார வசதி வீதி வசதிகள் குடிநீர் வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்ட நிலையிலும் குறித்த இடத்தில் இன்று வரை ஒரு குடும்பம் கூட குடியேறவில்லை இந்நிலையில் குறித்த வீடுகள் அனைத்தும் பத்தைகள் மூடி காடாக கிடப்பதோடு அந்த பகுதியில் பல்வேறு சமூக விரோத சம்பவங்கள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற போதும் இந்த வீட்டுத்திட்டத்தில் மக்களை குடியேற்றுமாறு பல தடவைகள் மாவட்ட மட்டங்களில் பிரதேச மட்டங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் தெரிவித்தும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் குறித்த பகுதியில் வீட்டு திட்டத்தை பெற்றுக் கொண்டவர்கள் பலர் இரண்டாவது தடவையாகவும் வேறு இடங்களில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே வீட்டுத்திட்டத்தை பெற்றுக் கொண்டு அந்த இடத்தில் குடியேறி இருக்கிறார்கள்.
மக்கள் ஒரு இடத்தில் கூட வீடு பெறமுடியாத நிலை இருக்கின்ற போதும் அரசினுடைய சலுகைகளை இரண்டுமுறை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது குறித்த வீட்டுத்திட்டம் எந்த பயன்பாடுமாற்ற நிலையில் சட்டவிரோத செயற்பாடுகளின் மையமாக மாறியுள்ள நிலைமை இவ்வாறு இருக்க குறித்த இரண்டாவது வீட்டையும் பெற்ற அதிகாரிகளிடமிருந்து குறித்த வீடுகளை மீள பெற்று வீடு இல்லாதவர்களுக்கு வழங்கவோ அல்லது அவர்களை குடியிருத்தவோ எந்த ஒரு அதிகாரிகளோ மாவட்ட அபிவிருத்தி குழுவோ இதுவரை ஒரு தீர்க்கமான முடிவுகளை எடுக்கவில்லை.
இது இவ்வாறு இருக்க துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் நந்தகுமார் நகர் மாதிரி கிராமத்தில் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் அரசு அலுவலர்களுக்கென வழங்கப்பட்ட வீடுகள் பூட்டிய நிலையில் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அதேபோன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வடகாடு பகுதியில் அமைக்கப்பட்ட கைலாய வன்னியன் மாதிரி கிராமம் பண்டாரவன்னியன் மாதிரி கிராமம் ஆகிய இரண்டு கிராமங்களிலும் அமைக்கப்பட்டவீடுகளில் அரச உத்தியோகத்தர்களின் வீடுகள் பூட்டப்பட்ட நிலையில் இன்றும் காணப்படுகின்றது இவ்வாறு அரச உத்தியோகத்தர்களுக்கு அமைக்கப்படுகின்ற வீடுகள் தொடர்ச்சியாக பயன்பாடற்று கிடக்கின்ற நிலையில் இப்போது புதிதாக A9 வீதி மாங்குளத்தில் ஒரு அரச விட்டு திட்டத்தை கொண்டு வருவதற்காக அரசு அதிகாரிகள் மும்முரமாக முயற்சித்து வருகிறார்கள்.
குறிப்பாக இன்று வரை இவ்வாறு மக்கள் குடியிருக்காத அரச உத்தியோகத்தர்கள் குடியிருக்காத வீடுகளில் மக்களை குடியமர்த்த முடியாத அதிகாரிகள் புதிதாக அரச உத்தியோகத்தர்களை இலக்காக கொண்டு வீட்டுத்திட்டம் அமைப்பது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்த வீட்டுத்திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த உத்தியோகத்தர்களும் A9 வீதியின் பிரதான வீதிக்கு அருகில் காணிகளை பிடிப்பதற்காகவா இந்த வீட்டுத் திட்டத்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
வீட்டுத் திட்டங்களை அமைப்பது பல இடங்கள் இருக்கின்ற போதும் A -9 வீதியை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த வீட்டுத் திட்டத்தை அரச உத்தியோகத்தர்களுக்கு என அமைப்பதானது பனிக்கன்குளம் வீட்டுத்திட்டம் போன்று ஏனைய வீட்டுத் திட்டங்கள் போன்ற ஒரு நிலைமைக்கு செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளமையினால் இந்த வீட்டுத் திட்டத்தை நிறுத்தி உரிய இடங்களில் பொதுமக்களோடு சேர்த்து வீட்டுத் திட்டங்களை வழங்குமாறும் இவ்வாறு வழங்குவதால் பல்வேறு சிக்கல் நிலைமைகள் தோற்றம் பெறும் எனவும், தொடர்ச்சியாக இந்த வீட்டுத்திட்டத்திற்கு அதிகாரிகளை துணைபோகாது ஏற்கனவே வழங்கப்பட்ட வீடுகளில் அதிகாரிகளை குடியேற்றி அதன் பின்னர் படிப்படியாக ஏனைய இடங்களுக்கு செல்லுமாறு மக்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் மக்களுடைய எந்த கோரிக்கையையும் செவிசாய்க்காது புதிதாக வீட்டுத் திட்டத்தை அமைத்து A 9 வீதியோரத்தில் காணிகளை பெறுவதற்காக சில தரப்புக்கள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான ஒரு நிலைமையில் இருந்து குறித்த பகுதியில் நிரந்தரமாக வாழ்கின்ற மக்களுக்கு கூட எதிர்காலத்தில் அரச திணைக்களங்கள் வர இருக்கின்றது என்று காணிகளை வழங்காத பிரதேச செயலகம் மாவட்ட செயலகம் தற்போது அரசு அதிகாரிகளுக்கு குறித்த இடத்தில் காணியை வழங்கி வீட்டுத்திட்டம் வழங்குவதன் உத்தி என்ன என்பது தொடர்பான குழப்ப நிலையில் மக்கள் இருக்கின்றார்.
எனவே குறித்த வீட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டு உரிய முறையில் ஏற்கனவே வழங்கப்படட வீடுகளை பாவனை உள்ளதாக மாற்றிவிட்டு புதிதாக வேறு ஒரு இடத்தில் அவர்களுக்கு தேவையாயின் அந்த வீட்டுத் திட்டங்களை வழங்குமாறும் இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் செய்ய வேண்டாம் எனவும் மக்கள் கோரி நிற்கின்றனர்.













முல்லைத்தீவில் பயனற்ற வீட்டுத்திட்டம்........!!! முல்லைத்தீவில் பயனற்ற வீட்டுத்திட்டம்........!!! Reviewed by Mankulam News on 6/14/2019 07:24:00 pm Rating: 5

புதுக்குடியிருப்பில் பல வீதிகள் சீரமைப்பு.......!!!

6/14/2019 07:17:00 pm

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குச் சொந்தமான பல வீதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் நிதிப்பங்கீட்டில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

அவற்றில் புதுக்குடியிருப்பு முதலாம் வட்டார வீதி தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.



புதுக்குடியிருப்பில் பல வீதிகள் சீரமைப்பு.......!!! புதுக்குடியிருப்பில் பல வீதிகள் சீரமைப்பு.......!!! Reviewed by Mankulam News on 6/14/2019 07:17:00 pm Rating: 5

மாங்குளத்தில் அரச உத்தியோகத்தர்களிற்கான மாதிரி கிராமத்திற்கு - அடிக்கல் நாட்டப்பட்டது........!!!

6/14/2019 07:09:00 pm

அரச உத்தியோகத்தர்களிற்கான மாதிரி கிராம வீட்டுத்திட்டம் ஒட்டுசுட்டான் மாங்குளம் பகுதியில் அடிக்கல் நிகழ்வு இன்று (2019-06-14) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வமவ அடைக்கலநாதன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் , புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் , புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் M.முகுந்தகஜன் ,  ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், மாங்குளம் ஆதார வைத்தியசாலை வைத்தியர், வனபரிபாலன உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.











மாங்குளத்தில் அரச உத்தியோகத்தர்களிற்கான மாதிரி கிராமத்திற்கு - அடிக்கல் நாட்டப்பட்டது........!!! மாங்குளத்தில் அரச உத்தியோகத்தர்களிற்கான மாதிரி கிராமத்திற்கு - அடிக்கல் நாட்டப்பட்டது........!!! Reviewed by Mankulam News on 6/14/2019 07:09:00 pm Rating: 5
ads 728x90 B
Powered by Blogger.