மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று குடிநீர் தொகுதி மாணவர்களின் பாவனைக்காக கையளிப்பு......!!!!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற "நாட்டுக்காக ஒன்றினைவேம்" திட்டத்தின் கீழ் இன்று ஆரம்ப நிகழ்வுகள் இன்று(2019-06-03) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றது.
அந்தவகையில் முல்/மாங்குளம் மத்திய மாக வித்தியாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொகுதி மாணவர்களின் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
வித்தியாலய முதல்வர் உயர் திரு.த.யோகானந்தராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலக உதவிச் செயலாளர் லலித் பண்டார , சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருமான ச.சத்தியசுதர்சன் , புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மு.முகுந்தகஜன் , வலயக்கல்வி அலுவலக உத்தியோகஸ்தர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று குடிநீர் தொகுதி மாணவர்களின் பாவனைக்காக கையளிப்பு......!!!!!
Reviewed by Mankulam News
on
6/03/2019 09:22:00 pm
Rating:

No comments: