Seo Services
Results for மாங்குளம் ம.ம.வி

முல்/மாங்குளம் ம.ம.வி பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது........!!!

7/08/2019 02:31:00 pm

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மத்திய மகாவித்தியாலயத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் த.யோகானந்தராஜா தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் விருந்தினராக துணுக்காய் கல்வி வலய கல்வி அபிவிருத்தி பிரதி கல்விப்பணிப்பாளர் திரு பிரதீப் ஆனந்த் மற்றும் துணுக்காய் கல்வி வலய கணக்காளர், மாங்குளம் சித்திவிநாயகர் ஆலய பிரதம சிவாச்சாரியார் மற்றும் தேவன்பிட்டி ரோமன் கத்தோலிக்க பாடசாலையின் பிரதி அதிபர் பங்குதந்தை லெபோன் சுதன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிறேமகாந்த், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முகுந்தகஜன், அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.










முல்/மாங்குளம் ம.ம.வி பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது........!!! முல்/மாங்குளம் ம.ம.வி பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது........!!! Reviewed by Mankulam News on 7/08/2019 02:31:00 pm Rating: 5

முல்/மாங்குளம் ம.ம.வி சிற்றூண்டிச்சாலை இன்று M.P சிவமோகன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது......!!!

7/04/2019 05:58:00 pm

முல்/மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிற்றூண்டிச்சாலை இன்று (2019-07-04) திறந்துவைக்கப்பட்டது.

"அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" தேசிய வேலைத்திட்டம் 2016-2020 இன் கீழ் முல்/மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி அமைச்சினால் நிர்மாணிக்ப்பட்ட சிற்றூண்டிச்சாலை வன்னி மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களால் இன்று வியாழக்கிழமை (2019-07-04) திறந்துவைக்கப்பட்டு மாணவர்களுக்கு உரித்தாக்கப்பட்டது.






முல்/மாங்குளம் ம.ம.வி சிற்றூண்டிச்சாலை இன்று M.P சிவமோகன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது......!!! முல்/மாங்குளம் ம.ம.வி சிற்றூண்டிச்சாலை இன்று M.P சிவமோகன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது......!!! Reviewed by Mankulam News on 7/04/2019 05:58:00 pm Rating: 5

முல்/மாங்குளம் ம.ம.வி பரிசளிப்பு விழா - 2019 ஏதிர்வரும் திங்களன்று நடைபெறவுள்ளது.

7/03/2019 07:50:00 pm

முல்லைத்தீவு மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்தினுடைய வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் 08-07-2019 திங்கட்கிழமை பாடசாலை அதிபர் திரு.த.யோகானந்தராசா அவர்களின் தலைமையில் பாடசலையின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.


முல்/மாங்குளம் ம.ம.வி பரிசளிப்பு விழா - 2019 ஏதிர்வரும் திங்களன்று நடைபெறவுள்ளது. முல்/மாங்குளம் ம.ம.வி பரிசளிப்பு விழா - 2019 ஏதிர்வரும் திங்களன்று நடைபெறவுள்ளது. Reviewed by Mankulam News on 7/03/2019 07:50:00 pm Rating: 5

முல்/மாங்குளம் மத்திய மகா வித்தியாலய மணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு........!!!!!

6/08/2019 09:42:00 pm

முல்லைத்தீவு மாங்குளம் மத்திய மகா வித்தியாலய மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று  (2019-06-07) வெள்ளிக்கிழமை காலை 08:15 மாணியளவில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வித்தியாலய முதல்வர் உயர் திரு.த.யோகானந்தராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக துணுக்காய் கல்வி வலய தமிழ் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் கவிதா சந்திரகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மாங்குளம் மத்திய மகா வித்தியாலய வரலாற்றில் முதல் முறையாக இந்த வருடம் சற்று வேறுபட்ட முறையில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

அதாவது சென்ற வருடம் மாணவ தலைவர்களாக பதவிவகித்த மாணவர்களால் நிகழ்வின் கதாநாயகர்கள் பாடசாலையின் பிரதான நுழைவாயிலில் இருந்து பாடசாலையின் மேலைத்தேய மங்கள வாத்திய இசையுடன் பிரதான மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

￰சிரேஷ்ட மாணவ தலைவர் சந்திரசேகரம் துஷியந்தன்
உதவி மாணவத்தலைவன்      சாந்தகுமார்    தாஸ்கரன்
சிரேஷ்ட  மாணவத்தலைவி   சதீஸ்குமார் நிதர்சனா
உதவி  மாணவத்தலைவி       மஹாலிங்கம்  குவேனி

ஆகியோர் உட்பட 21 மாணவ தலைவர்கள் சின்னம் சூட்டி கெளரவிக்கப்பட்டனர்.

குறித்த மாணவ தலைவர்களுக்கு மாங்குளம் நியூஸ் சார்பாகவும் மாங்குளம் நியூஸ் வாசகர்கள் சார்பாகவும் அவர்களது பணியை சிறப்பாக தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.


















முல்/மாங்குளம் மத்திய மகா வித்தியாலய மணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு........!!!!! முல்/மாங்குளம் மத்திய மகா வித்தியாலய மணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு........!!!!! Reviewed by Mankulam News on 6/08/2019 09:42:00 pm Rating: 5

நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட செயலமர்வு - மு/மாங்குளம் ம.ம.வி

6/08/2019 05:11:00 pm

முல்லைத்தீவு மாவட்டத்தில் 'நாட்டிற்காக ஒன்றிணைவோம்' செயற்றிட்டத்தில், பாடசாலைகளில் மாணவர்களின் மென்திறன்களை வளர்த்தெடுப்பதற்கான செயலமர்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டன.

அந்த வகையில் துணுக்காய் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.சஞ்சீவன் அவர்களின் ஏற்பாட்டில் மு/மல்லாவி மத்திய கல்லூரி, மு/மாங்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் தரம் - 10, 11 மாணவர்களுக்கான செயலமர்வுகள் மு/மல்லாவி மத்திய கல்லூரி, மு/மாங்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடைபெற்றன.


துணுக்காய் பிரதேச செயலக மேற்பார்வையில் நடைபெற்ற இச்செயலமர்வின் வளவாளர்களாக உள மகிழ்வூட்டும் இல்லத்தின் முதன்மை வளவாளர்களான திரு.நா.கு. மகிழ்ச்சிகரன், திரு.சு. இக்னேசியஸ் கிளனி ஆகியோர் கலந்து கொண்டனர்.





நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட செயலமர்வு - மு/மாங்குளம் ம.ம.வி நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட செயலமர்வு - மு/மாங்குளம் ம.ம.வி Reviewed by Mankulam News on 6/08/2019 05:11:00 pm Rating: 5

மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று குடிநீர் தொகுதி மாணவர்களின் பாவனைக்காக கையளிப்பு......!!!!!

6/03/2019 09:22:00 pm

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற "நாட்டுக்காக ஒன்றினைவேம்" திட்டத்தின் கீழ் இன்று ஆரம்ப நிகழ்வுகள் இன்று(2019-06-03) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றது.

அந்தவகையில் முல்/மாங்குளம் மத்திய மாக வித்தியாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொகுதி மாணவர்களின் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

வித்தியாலய முதல்வர் உயர் திரு.த.யோகானந்தராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலக உதவிச் செயலாளர் லலித் பண்டார , சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருமான ச.சத்தியசுதர்சன் , புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மு.முகுந்தகஜன் , வலயக்கல்வி அலுவலக உத்தியோகஸ்தர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.




மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று குடிநீர் தொகுதி மாணவர்களின் பாவனைக்காக கையளிப்பு......!!!!! மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று குடிநீர் தொகுதி மாணவர்களின் பாவனைக்காக கையளிப்பு......!!!!! Reviewed by Mankulam News on 6/03/2019 09:22:00 pm Rating: 5
ads 728x90 B
Powered by Blogger.