10,000 மரக்கன்றுகள் நாட்டும் திட்டம் ஆளுநர் தலைமையில் மாங்குளம் 226 ஆவது மைல் கல்லில் ஆரம்பம்....!!!
உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாகவும் இத்தினைத்தை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு வடமாகாணத்தின் பங்களிப்பினை வழங்கும் நோக்கிலும் கண்டி - யாழ் பிரதான வீதியான A9 வீதியின் வவுனியா தொடக்கம் இயக்கச்சி வரையான வீதியின் இருமருங்கிலும் மரக்கன்றுகளை நாட்டும் ஆரம்ப செயற்திட்டம் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் A9 வீதியின் மாங்குளம் 226 ஆவது மைல்கல் பிரதேசத்தில் கடந்த 05-06-2019 புதன்கிழமை முற்பகல் இடம்பெற்றது.
A9 வீதியின் குறிப்பிட்ட பகுதியினை பசுமை வீதியாக மாற்றும் ஆளுநரின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த மரநடுகைத் திட்டம் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு.பற்றிக் டிரஞ்சன் அவர்களின் மேற்பார்வையில் வடமாகாண விவசாய அமைச்சின் உதவியுடன் பிரதேச சபைகளின் பராமரிப்பில் இடம்பெறுவதுடன் இந்த திட்டத்தின் மாவட்ட ரீதியான நிகழ்வுகள் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர்களின் தலைமையில் வவுனியா மற்றும் ஆனையிறவு பிரதேசங்களில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வில் யாழ் இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் அவர்கள், வடக்குமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் அவர்கள், மாகாண உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகள், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலர், மாவட்ட செயலக அதிகாரிகள், ஆளுநர் செயலக அதிகாரிகள், மாகாணசபையின் திணைக்களங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
10,000 மரக்கன்றுகள் நாட்டும் திட்டம் ஆளுநர் தலைமையில் மாங்குளம் 226 ஆவது மைல் கல்லில் ஆரம்பம்....!!!
Reviewed by Mankulam News
on
6/07/2019 06:24:00 am
Rating:

No comments: