Seo Services
Results for இலங்கை

10,000 மரக்கன்றுகள் நாட்டும் திட்டம் ஆளுநர் தலைமையில் மாங்குளம் 226 ஆவது மைல் கல்லில் ஆரம்பம்....!!!

6/07/2019 06:24:00 am

உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாகவும் இத்தினைத்தை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு வடமாகாணத்தின் பங்களிப்பினை வழங்கும் நோக்கிலும்  கண்டி - யாழ் பிரதான வீதியான A9  வீதியின் வவுனியா தொடக்கம் இயக்கச்சி வரையான வீதியின் இருமருங்கிலும்  மரக்கன்றுகளை நாட்டும் ஆரம்ப செயற்திட்டம் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் A9 வீதியின் மாங்குளம் 226 ஆவது மைல்கல் பிரதேசத்தில் கடந்த 05-06-2019 புதன்கிழமை முற்பகல் இடம்பெற்றது.

A9 வீதியின் குறிப்பிட்ட பகுதியினை பசுமை வீதியாக மாற்றும் ஆளுநரின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த மரநடுகைத் திட்டம் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு.பற்றிக் டிரஞ்சன் அவர்களின் மேற்பார்வையில் வடமாகாண விவசாய அமைச்சின் உதவியுடன் பிரதேச சபைகளின் பராமரிப்பில் இடம்பெறுவதுடன் இந்த திட்டத்தின் மாவட்ட ரீதியான நிகழ்வுகள் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர்களின் தலைமையில் வவுனியா மற்றும் ஆனையிறவு பிரதேசங்களில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வில் யாழ் இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் அவர்கள், வடக்குமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் அவர்கள், மாகாண உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகள், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலர், மாவட்ட செயலக அதிகாரிகள், ஆளுநர் செயலக அதிகாரிகள், மாகாணசபையின் திணைக்களங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
10,000 மரக்கன்றுகள் நாட்டும் திட்டம் ஆளுநர் தலைமையில் மாங்குளம் 226 ஆவது மைல் கல்லில் ஆரம்பம்....!!! 10,000 மரக்கன்றுகள் நாட்டும் திட்டம் ஆளுநர் தலைமையில் மாங்குளம் 226 ஆவது மைல் கல்லில் ஆரம்பம்....!!! Reviewed by Mankulam News on 6/07/2019 06:24:00 am Rating: 5

மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி…! சாதாரணதர, உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை உங்கள் நகரங்களிலேயே பெற்றுக் கொள்ள வாய்ப்பு…!

6/07/2019 06:08:00 am
க.பொ.த சாதாரணதர பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு கல்வியமைச்சு புதிய இலகுவான வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.


இதன்படி மேற்குறித்த பரீட்சைக்குத் தோற்றியவர்கள் அவற்றின் சான்றிதழ்களைப்பெற கொழும்பிலுள்ள பரீட்சைகள் திணைக்களத்துக்கு அலைய வேண்டிய தேவையில்லை.எதிர்வரும் ஜூன் ஆறாம் திகதி முதல் நாட்டிலுள்ள பிரதான தபாலகங்களில் குறித்த சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.நாளாந்தம் இந்தச் சான்றிதழ்களைப்பெறுவதற்கு பரீட்சைகள் திணைக்களத்துக்கு 2000 பேர் வருகை தருகின்றனர்.எனவே நாட்டிலுள்ள பிரதம தபாலகங்களில், இந்த சான்றிதழ்களைப்பெறும் வகையில், கணனி வலையமைப்பு பரீட்சைகள் திணைக்களத்துடன் ஏற்படுத்தப்படவுள்ளது.எனவே, இந்தச் சான்றிதழ்கள் தேவைப்படுவோர் அதற்கான தகவல்களை வழங்கி அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி…! சாதாரணதர, உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை உங்கள் நகரங்களிலேயே பெற்றுக் கொள்ள வாய்ப்பு…! மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி…! சாதாரணதர, உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை உங்கள் நகரங்களிலேயே பெற்றுக் கொள்ள வாய்ப்பு…! Reviewed by Mankulam News on 6/07/2019 06:08:00 am Rating: 5

இலங்கையின் போக்குவரத்து துறையில் ஏற்படப் போகும் புதிய மாற்றம்… வீதிகளை அலங்கரிக்கப் போகும் புதிய பஸ் வண்டிகள்…!

5/25/2019 10:36:00 pm

இலங்கையில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் மூவாயிரம் பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழானவிதிகள் தொடர்பிலான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் அர்ஜூண ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுப் போக்குவரத்துக்கான பேருந்துகள் இறக்குமதி செய்யப்படும் போது அது தொடர்பான தராதரங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி, செயற்கையான முறையில் பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் போக்குவரத்து துறையில் ஏற்படப் போகும் புதிய மாற்றம்… வீதிகளை அலங்கரிக்கப் போகும் புதிய பஸ் வண்டிகள்…! இலங்கையின் போக்குவரத்து துறையில் ஏற்படப் போகும் புதிய மாற்றம்… வீதிகளை அலங்கரிக்கப் போகும் புதிய பஸ் வண்டிகள்…! Reviewed by Mankulam News on 5/25/2019 10:36:00 pm Rating: 5

கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட கோரிக்கை.........!!!!!

5/25/2019 10:29:00 pm

பாடசாலைகள் மூடப்பட்ட காலப்பகுதியினுள் விடுபட்ட பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு, கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.
இதன்படி, எக்காரணத்திற்காகவும், தவணை பரீட்சையை கைவிட வேண்டாம் என, அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.ரத்நாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த மாதம் 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலை தொடர்ந்து பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் கடந்த ஏப்ரல் 22ம் திகதி தொடங்கப்படவிருந்த போதும், பாதுகாப்பு நிலைமைகளை கவனத்திற்கொண்டு மே 6ம் திகதியே பாடசாலைகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையிலேயே, பாடசாலைகளில் விடுபட்ட பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அதிபர்களுக்கு, கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட கோரிக்கை.........!!!!! கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட கோரிக்கை.........!!!!! Reviewed by Mankulam News on 5/25/2019 10:29:00 pm Rating: 5
ads 728x90 B
Powered by Blogger.