Seo Services

நாளை முதல் 17 வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைளுக்கும் விடுமுறை

7/12/2020 09:20:00 pm
நாளை முதல் 17 வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைளுக்கும் விடுமுறை


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் மேலும் உக்கிரமடையும் பட்சத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகள் , அறநெறி பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் என்பவற்றுக்கு மீண்டும் விடுமுறை வழங்கி அனைவரதும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு கொவிட் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளினதும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக கல்வி பணிப்பாளர் தலைமையில் கல்வி அமைச்சில் தகவல் மத்திய நிலையமொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் நிலைமையைக் கருத்திற் கொண்டு கல்வி கட்டமைப்பிற்குள் உள்ளடங்கும் மாணவர்கள் , ஆசிரியர்கள் , அதிபர்கள் மற்றும் ஏனைய அனைத்து கல்வித்துறை சார் அதிகாரிகளின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் கல்வி அமைச்சு மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்காக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கமைய கல்வி அமைச்சில் மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார மேம்பாட்டு அதிகாரிகளை உள்ளடக்கிய தகவல் மத்தியநிலையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் மத்திய நிலையம் கல்வி பணிப்பாளரின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மத்திய நிலையத்தை 1988 என்ற அவசர தொலைபேசி இலக்கம் மூலமும் 011-2785818 என்ற பெக்ஸ் இலக்கத்தினூடாகவும் info@moe.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக் கூடாகவும் தொடர்பு கொள்ள முடியும்.

மேற்குறிப்பிடப்பட்ட இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் அதிபர்கள் , கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் தாம் பணிபுரியும் இடம் மற்றும் பிரதேசத்தில் கொவிட் - 19 தொடர்பில் தகவல்களை வழங்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் மத்திய நிலையத்தின் ஊடாக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மாகாண வலயங்கள் மற்றும் தொகுதிக்குள் வைரஸ் பரவல் நிலைமை தொடர்பில் பாடசாலைகள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதோடு அந்த தகவல்கள் குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை முகாமைத்துவப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கல்வி அமைச்சு தொடர்ச்சியாக கல்வித்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைவரதும் சுகாதார பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மேலும் தீவிரமடையும் பட்சத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகள் , அறநெறி பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் என்பவற்றுக்கு மீண்டும் விடுமுறை வழங்கி அனைவரதும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது


#Copy jvpnews.com

நாளை முதல் 17 வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைளுக்கும் விடுமுறை நாளை முதல் 17 வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைளுக்கும் விடுமுறை Reviewed by Mankulam News on 7/12/2020 09:20:00 pm Rating: 5

A34 ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் இன்று விபத்து

12/09/2019 08:15:00 pm

இன்றைய தினம்  ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் பதினான்காவது கிலோ மீட்டருக்கு அண்மையில் இடம்பெற்ற டிப்பர் மோட்டார்சைக்கிள் விபத்தின் போது காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியான சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக அவசர நோயாளர் காவு வண்டி வருவதற்கு தாமதமானதன் காரணமாக (20நிமிடங்களுக்கும் மேல் பல வாகனங்கள் அவ்விடத்தில் நின்றபோதிலும் யாரும் முன்வராத நிலையிலும்) அவ் வளியாக மாங்குளம் நோக்கி சென்றுகொண்டிருந்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் அவர்கள் தான் பயணித்த வாகனத்தில் கொண்டு சென்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக வந்துகொண்டிருந்த அவசர நோயாளர் காவு வண்டியில் மாற்றி அவரை ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளார்.

காயமடைந்தவர் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின் மாஞ்சோலை வைத்தியசாலையின் அவசர நோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து ஒன்று இடம்பெற்ற உடன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறவர்களை வேடிக்கை பார்க்காது உயிர்காப்போம்.

குறித்த விபத்தில் காயமடைந்தவர் உடல் நலம் தேறி வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்போம்


A34 ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் இன்று விபத்து A34 ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் இன்று விபத்து Reviewed by Mankulam News on 12/09/2019 08:15:00 pm Rating: 5

வடக்கில் 20,011 பேரும் கிழக்கில் 18,001 பேருமாக இன்று மாற்றுத்திறனாளிகள் தினம்

12/03/2019 01:37:00 pm

போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் 20,011 மாற்றுத்திறனாளிகளும் கிழக்கு 

மாகாணத்தில் 18,001 மாற்றுத்திறனாளிகளும் இன்று உலக மாற்றுத்திறனாளிகளோடுஇணைந்து 

மாற்றுத்திறனாளிகள் நாளை அனுஷ்டிக்கின்றார்கள்.

போர் நடந்த காலத்திலும், போரின் பின்னரான 

காலத்திலும்,மாற்றுத்திறனாளிகளோடு எமது சமூகம் 

பயணிக்கின்றதை இன்றுநாம் நன்றியோடு நினைவு 

கூறுகின்றோம். எம்மோடு இங்கேபயணிக்கும் அரச 

அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனஅதிகாரிகள் மற்றும் 

புலம்பெயர்ந்து கடல் கடந்துபல்லாயிரக்கணக்கான 

மைல்கள் துரத்தில் இருந்தாலும் எம் மீதுஅன்பு கொண்டு 

எம்மை அரவணைக்கும் எமது புலம்பெயர்உறவுகளுக்கும் 

எமது நன்றிகளை இந்த இடத்தில் கூறிக்கொள்கின்றோம்.

ஒரு மாற்றுத்திறனாளி என்ற நிலையில் 

ஒவ்வொருமாற்றுத்திறனாளிக்கும்அன்றாட வேலைகளைச் 

செய்வதற்கானபெரும் சவால்கள் இன்னமும் பெரும்பாலும் 

நிறைவேற்றப்படாதநிலையிலேயே வாழ்ந்து 

கொண்டிருக்கின்றார்கள். அதேவேளைமூப்பும், நோயும் 

வருகின்ற போதும் வடக்கிலும் கிழக்கிலுமாகஇருக்கின்ற 

38,012 மாற்றுத்திறனாளிகளின் எதிர்கால வாழ்வுகுறித்து 

நாங்கள் இப்போது சிந்திக்க 

வேண்டியவர்களாகஇருக்கின்றோம்.

மாற்றுத்திறனாளிகள் குறித்தான ஒரு 

கொள்கையைஉருவாக்குவதற்காக நாங்கள் முனைப்புடன் 

பாடுபட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளையும், பாதிக்கப்பட்டோரையும் 

இணைத்துநடாத்தப்பட்ட சுயமதிப்பீட்டு மாநாட்டின் 

அடிப்படையில்பாதிக்கப்பட்டோர் வேண்டி நிற்கும் 

விடயங்களைநடைமுறைப்படுத்தவல்ல சக்தி 

படைத்தவர்கள், அதிகாரத்திலுள்ளவர்களை சேர்த்து 

செயற்படுத்துவதற்கு DATA முயற்சித்து வருகிறது. நாம் 

ஒவ்வொரு சந்திப்பிலும் கேட்கும் விடயங்கள் பின்வருமாறு 

அமைகின்றன.

மாற்றுத்திறனாளிகள் குறித்தான கொள்கை

மற்றவர்களில் தங்கி வாழ்தலில் இருந்து விடுபடக்கூடிய 

அம்சங்களைஉள்ளடக்கி மாற்றுத்திறனாளிகளுக்கான 

கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு

நடைமுறையிலுள்ள மாதாந்த கொடுப்பனவிற்கு 

மேலதிகமாக மிகவும் பாதிப்பு நிலைக்குள்ளாகியுள்ள 

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் 10,000 ரூபாவிற்கு 

குறையாது கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும். 

உதாரணமாகமுள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், 

இரண்டு கைகளையும் இழந்தோர், இரண்டு கண்களையும் 

இழந்தோருக்கான மாதாந்த கொடுப்பனவுகள் 10,000 

ரூபாவிற்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்.

அணுகும் வசதி

பொது இடங்கள் அனைத்திலும் 

மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகும் வசதிகள் 

இருப்பதோடு மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்து 

ஏற்படுத்தப்பட வேண்டும்.

பராமரிப்பு இல்லங்கள்

அனைத்து வசதிகளுடன் கூடிய பராமரிப்பு இல்லங்கள் 

ஒவ்வொருமாவட்டத்திலும் உருவாக்கப்படுதல் வேண்டும்.

ஆதரவற்ற சிறுவர்கள்

ஆதரவற்ற சிறுவர்களுக்கு அவர்களது சிறுவர் பராயத்தில் 

அரசகொடுப்பனவுகள் உறுதிப்படுத்தப்படுவதோடு 

அவர்கள் வளர்ந்து வரும்நிலையில் அவர்களின் 

வாழ்க்கையை நிலைபெறச் 

செய்வதற்கானகொடுப்பனவுகளையும், 

வழிகாட்டுதல்களையும், உருவாக்குதல் வேண்டும்.

தொழில் முயற்சி

மாற்றுத்திறனாளிகளாலும், பெண் தலைமைத்துவ 

குடும்பத்தினராலும்மேற்கொள்ளப்படுகின்ற வாழ்வாதார 

முயற்சிகளுக்கான நிதி வளங்களை ஏற்படுத்த வேண்டும்.

தொழில் வாய்ப்பு

அரச வேலைவாய்ப்புக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான 

தொழில் வாய்ப்புமூன்று வீதத்திலிருந்து ஆறு வீதமாக 

உயர்த்தப்படுதலை உறுதிப்படுத்த வேண்டும்.

சட்ட அமுலாக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் 

முழுமையானஅளவில் அமுலாக்கப்பட வேண்டும்.

கல்வி

பாதிக்கப்பட்டோருக்கான விசேட கல்வி முறைகள் 

முழுமையான விதத்தில்அமுலாக்கப்பட்டு 

பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய 

வழிமுறைகளை செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு

வடக்கு கிழக்கில் உள்ள மாற்றுத்திறனாளி வீரர்கள் 

சர்வதேச அளவில்விளையாட்டுக்களில் 

பங்குபற்றுவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும்.

முதியோர் கொடுப்பனவுகள்

போரின் போது தமது பிள்ளைகளை இழந்த 

முதியவர்களுக்கான மாதாந்தகொடுப்பனவுகள் 

வழங்கப்பட வேண்டும்.



வடக்கு கிழக்கு மாகாணம் எங்கிலும் நகரப்பகுதிகளை 

மையமாகக்கொண்டும், தொலைத்தொடர்பு வசதிகளை 

பெற்றுக்கொள்ளமுடியாத கிராமங்களை மையமாகக் 

கொண்டும்மாற்றுத்திறனாளி அமைப்புக்கள் 

இயங்குகின்றன. அவற்றில் எமதுவிளையாட்டுப் 

போட்டிகளிலும் எமது சுய மதிப்பீட்டு மாநாட்டிலும்பங்கு 

கொண்ட அமைப்புகளை அவைகளின் 

தலைமையகம்அமைந்துள்ள இடத்தை மையமாக வைத்து 

இங்கே நாங்கள்பட்டியலிடுகின்றோம்.


எமது உறவுகளிடம் நாங்கள் வேண்டிக் கொள்வது 

இந்தப்பட்டியலில் இருக்கின்ற அனைத்து 

அமைப்புகளுக்கும் ஏதோ ஒருவகையில் உங்களின் 

உதவிக்கரம் நீட்ட வேண்டும். குறிப்பாகதொலைத்தொடர்பு 

வசதிகள் எதுவுமற்ற நிலையில் 

இயங்கிக்கொண்டிருக்கின்ற அமைப்புகளுக்கும் உங்கள்

அன்பு நேரடியாகச்சென்றடைய வேண்டும் என்று நாங்கள் 

விரும்புகிறோம்.


குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் 

அவர்களைநீங்கள் நாடிச் செல்ல வேண்டும். உங்களை 

நாடி வரும்  அளவிற்குஅவர்களிடம் வசதிகள் 

எதுவுமற்றநிலையில் தான் இயங்கிவருகிறார்கள் 

என்பதை இந்த மாற்றுத் திறனாளிகள் 

தினத்தில்கூறிக்கொள்கிறோம். அவர்களுக்கு உங்கள் 

அன்பு சென்றடைந்து, அவர்கள் வாழ்வில் ஒரு மாற்றம் 

ஏற்பட வேண்டும் என்று இந்தஉலக மாற்றுத் திறனாளிகள் 

தினத்தில் நாம் வேண்டிநிற்கின்றோம்.



அம்பாறை மாவட்டம்

1  புதுயுகம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு விநாயகபுரம்

2  S.R.K. மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

3  பொத்துவில் விசேட தேவையுடையோர் ஒன்றியம்

4  பொத்துவில் செவிப்புலனற்றோர் சமூகசேவை ஆணைக்குழு

5  சம்மாந்துறை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

6  மதிஒளிமாற்றுத்திறனாளிகள் சங்கம் (நாவிதன்வெளி)

7  R.K.M.விசேட அமைப்பு

8  அக்கரைப்பற்று மாற்றுத்திறனாளிகள் சங்கம்

9  காரைதீவு மாற்றுத்திறனாளிகள் சங்கம்

10   அம்பாறை மாவட்ட அணி

திருகோணமலை

11   சேருநுவர சிவசக்தி மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

12   வெருகல் கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

13   மூதூர் ஆற்றல் வள நிலையம்

14   மூதூர் மாற்றத்திறனாளிகள் நலன்புரி நிலையம்

15   திருகோணமலை மாற்றுத்திறனாளிகள் நலன்புரி சங்கம்

16   திருகோணமலை மாவட்ட அணி

மட்டக்களப்பு மாவட்டம்

17   ஏர்முனை செங்கலடி

18   ஏறாவூர் நகர் சமாசம்

19   காத்தான்குடி பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம்

20   ஆரையம்பதி சமூக உள்வாங்கல் அமைப்பு

21   வெல்லாவெளி கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

22   பட்டிப்பளை உதய ஒளி

23   வாழ்வகம் விசேடதேவையுடையோர் அமைப்பு

24   வாழைச்சேனை ஒளிமயம் மாற்றுத்திறனாளி அமைப்பு

25   டிசா மாற்றுத்திறனாளி அமைப்பு (களுவாஞ்சிகுடி-9)

26   புதிய பாதை (கிரான்)

27   எதிர் நீச்சல் (சத்துருகொண்டான்)

28   வாழ்வின் உதயம் (வாழைச்சேனை)

29   ஆரோக்கியா மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

30   ஓசானம் மனவளர்ச்சி குன்றியோர் இல்லம்

31   வாழ்வோசை Y.M.C.A

32   சென் ஜோசப் பாடசாலை

33   உதயம் விழிப்புலனற்றோர் சங்கம்

34   தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை

35   மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம்

36   ஸிமிர்னா விசேடதேவையுடையோர் இல்லம்

37   ஓட்டமாவடி மத்தி ஒளியம்

38   கோரளைப்பற்று மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

39   மென்கெப்

40   சாஹிரா விசேட தேவையுடையோர் பாடசாலை

41   Humanaid

42   புகலிடம் நிலையம் (நாவக்கேணி)

43   சாசலியா வித்தியாலயம்

44   சாம்சாம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

வவுனியா

45   SEED

46   ஓர்கான்

47   மாற்றுவலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம்வன்னி

48   வவுனியா மாற்றத்திறனாளிகள் சம்மேளனம்

முல்லைத்தீவு

49   ஒளிரும்வாழ்வு (துணுக்காய்)

50   ஒளிரும்வாழ்வு புதுக்குடியிருப்பு

51   பீனிக்ஸ்

52   உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோர்அமைப்பு

53   தாமரை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

54   முல்லைமலர் சங்கம்

கிளிநொச்சி

55   வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்

56   கிளிநொச்சி மாற்றத்திறனாளிகள் சம்மேளனம்

யாழ்ப்பாணம்      

57   ஜெய்பூர்

58   மாற்றுவலுவுள்ளோருக்கான பெதஸ்ராவின்தரிசனம்

59   வாழ்வகம்

60   யாழ் விழிப்புலனற்றோர் சங்கம்

61   ARK (பெட்டகம்)

62   வடமராட்சி செவிப்புலன் அற்றோர் நிறுவனம்

63   சிவபூமி பாடசாலை

64   வலயக்கல்வி பணிமனை யாழ்ப்பாணம்

65   மாற்றுத்திறனாளிகளுக்கான பணியகம்

66   மாற்றுவலுவுடையோர் புனர்வாழ்வு நிறுவனம்

67   செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனம்

68   நபீல்ட் விழிப்புலன் செவிப்புலன் இழந்தோர்பாடசாலை

மன்னார்

69   வாழ்வுதயம்

70   மன்னார் மாவட்ட தேனீ மாற்றுத்திறனாளிகள் சுயஉதவி அமைப்பு

71   மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வுசங்கம்

வடக்கில் 20,011 பேரும் கிழக்கில் 18,001 பேருமாக இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் வடக்கில் 20,011 பேரும் கிழக்கில் 18,001 பேருமாக இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Reviewed by Mankulam News on 12/03/2019 01:37:00 pm Rating: 5

செவிப்புலனற்றோருக்கான சர்வதேச கிரிக்கெட் – வீரர்களுக்கு BTCL நிதி ஆதரவு

11/22/2019 05:15:00 pm

கிரிக்கெட் என்று சொன்னவுடன் ஆர்ப்பரிக்கும் மைதானமும் ஆவேசமாக சத்தமிட்டு விளையாடும் விளையாட்டு வீரர்களும் நினைவுக்குள் வந்து செல்வார்கள். ஆனால் ஓசை எதுவும் இல்லாமல் சைகை மொழி மூலமும் ஒரு கிரிக்கெட்டை நமது உறவுகள் விளையாடி வருகின்றார்கள். அவ்வாறு விளையாடும் ஒரு விளையாட்டு கேட்டல் மற்றும் பேச்சு பாதிப்புக்கு உட்பட்டவர்களையும் ஊக்குவிக்கும் முகமாகமான கிரிக்கெட் ஒன்று இந்தியாவில் நடைபெற இருக்கின்றது. அதில் இலங்கை சார்பாக விளையாடுவதற்கு வட மாகாணத்திலிருந்து மூவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
ரூட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்தியா செல்லும் மூவருக்கு அவர்களுடைய பயண சிட்டைக்கான செலவினை ஏற்றுக் கொள்ளுமாறு DATA அமைப்பினரிடம் ரூட் நிறுவனம் வேண்டுகோள் விடுத்தது.
அந்த வகையில் அவர்களது பயண சிட்டடைக்கான செலவினை பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் சம்மேளனம் பொறுப்பேற்று அவர்களுக்கு தலா 47,000.00 ரூபா வீதம் 141,000.00ரூபா நன்கொடையாக அளித்துள்ளமைக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரியப்படுத்தி கொள்வதோடு 21.11.2019 அன்று DATA குழுவினர் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உதவியினை வழங்கி வைத்தனர்.
பொதுவாகவே கேட்டல் பேச்சு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஏனைய மாற்றுத்திறனாளிகளை போலல்லாமல் ஒரு சாதாரண மனிதர்களைப் போலவே தென்படுவர். அவ்வாறு அவர்கள் இருப்பதன் காரணமாக அவர்களுடைய தேவைகள் இந்த சமூகத்தில் பெரிதும் பேசப்படுவதில்லை. சொல்ல முடியாத ஏக்கங்களும் அபிலாசைகளையும் அவர்கள் சொல்லாமல் தமக்குள்ளேயே புதைத்து வாழ்ந்து வருகின்றார்கள். அவ்வாறான ஒரு சமூக கூட்டத்தை அடையாளப்படுத்துவதற்கு இந்த கிரிக்கெட் ஒரு தளமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
இதேவேளை விழிப்புலன் பாதிக்கப்பட்டவர்களும் சத்தப்பந்து கிரிக்கெட் போட்டியினை விளையாடுகின்றார்கள். அவர்கள் ஏற்கனவே தமிழ் பரா விளையாட்டு போட்டியில் ஒரு அங்கமாக உள்வாங்கப்பட்டிருக்கும் நிலையில் செவிப்புலன் பாதிக்கப்பட்டோருக்கான கிரிக்கெட்டும் இனிவரும் காலங்களில் தமிழ் பரா விளையாட்டு போட்டியின் ஒரு அங்கமாக உள்வாங்கப்படுவதற்காகவும் ஆலோசிக்கப்படுகின்றது.
அத்தோடு 2016, 2017, 2018 ஆகிய வருடங்களில் நடாத்தப்பட்ட தமிழ் பரா விளையாட்டுப் போட்டிகளின் ஊடாகவும் தேசிய, சர்வதேச ரீதியில் வீரர்களை பங்குபெற செய்வதற்கான முயற்சிகளையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 
பூமிப்பந்து எங்கிலும் வாழும் குறிப்பாக தமிழ் மக்கள் கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தை தாம் வாழும் பிரதேசங்களில் அதற்கான சம்மேளனங்கள் அமைத்து விளையாடி வருகிறார்கள். அவர்களும் பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் சம்மேளனத்தை போல பாதிக்கப்பட்டவர்களது கிரிக்கெட்ரிற்கு உதவுவதற்கு முன் வர வேண்டும் என்று அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.
  
 
  
 
செவிப்புலனற்றோருக்கான சர்வதேச கிரிக்கெட் – வீரர்களுக்கு BTCL நிதி ஆதரவு செவிப்புலனற்றோருக்கான சர்வதேச கிரிக்கெட் – வீரர்களுக்கு BTCL நிதி ஆதரவு Reviewed by Mankulam News on 11/22/2019 05:15:00 pm Rating: 5

மாங்குளம் ம.வி மாணவர்கள் மூவருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு

11/21/2019 08:13:00 am

மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற போக்குவரத்தில் ஈடர்படுகின்ற மாணவர்களுக்கான  துவிச்சக்கர வண்டிகள் உதவும் இதயங்கள் நிறுவனத்தினூடாக வழங்கிவைக்கப்பட்டது.

உதவும் இதயங்கள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற 3 மாணவர்கள் தங்களுடைய கற்றல் செயற்பாட்டை இலகுபடுத்தும் நோக்கில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் தலைமையில் மாங்குளத்தில் நேற்று  (20/11/2019) நடைபெற்றது.

உதவிகளை ஜெர்மனியில் வசித்து வரும் நடராசா பத்மராஜா அவர்கள் தன்னுடைய 50வது பிறந்தநாளை முன்னிட்டு இரு மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்ததோடு அமெரிக்காவில் வசித்து வருகின்ற திரு நவநேசன்  அவர்களின் புதல்வி செல்வி ந.அனுசா அவர்கள் தன்னுடைய மூன்றாவது பிறந்தநாள் நினைவாகவும் ஒரு துவிச்சக்கர வண்டியும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாங்குளம் கிராமிய மகளிர் சுய முன்னேற்ற குழுக்களினுடைய உறுப்பினர்கள் மற்றும் மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி மற்றும் மாங்குளம் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களுடைய பெற்றோர் போன்றோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மாங்குளம் ம.வி மாணவர்கள் மூவருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு மாங்குளம் ம.வி மாணவர்கள் மூவருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு Reviewed by Mankulam News on 11/21/2019 08:13:00 am Rating: 5

மாற்றுத்திறனாளிகளின் மாத கொடுப்பனவு 10,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்! பிரதமரிடம் DATA கோரிக்கை!!

10/18/2019 02:14:00 pm



மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மாற்றுத்திறனாளிகளான முள்ளந்தண்டுவம் பாதிக்கப்பட்டோர், இரண்டு கைளையும் இழந்தோர், இரண்டு கண்களையும் முற்றாக இழந்தோருக்கான மாதாந்த கொடுப்பனவுகளாக மாதம் 10,000 ரூபாய் அளவில் அரசு வழங்க வேண்டும் என்று DATA அமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கோரிக்கை விடுத்தது.

அதேவேளை உழைக்கும் மாற்றுத்திறனாளிகள், உழைக்கும் பெண்தலமைத்துவ குடும்பத்தை சேர்ந்தோரது தொழிலை விருத்தி செய்வதற்கான உதவியையும் அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

யாழ்ப்பாணத்தில் பிரதமருடனான மக்கள் சந்திப்பின் கலந்து கொண்ட DATA அமைப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்ததோடு சுயமதிப்பீட்டு மாநாட்டின் பிரதியையும் அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருந்த சிறு குறிப்பு அடங்கிய கடிதத்தினையும் கையளித்திருந்தனர்.

பிரதமரிடம் அளிக்கப்பட்ட கடிதத்தின் பிரதியும் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.





மாற்றுத்திறனாளிகளின் மாத கொடுப்பனவு 10,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்! பிரதமரிடம் DATA கோரிக்கை!! மாற்றுத்திறனாளிகளின் மாத கொடுப்பனவு 10,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்! பிரதமரிடம் DATA கோரிக்கை!! Reviewed by Mankulam News on 10/18/2019 02:14:00 pm Rating: 5
ads 728x90 B
Powered by Blogger.