மாங்குளம் மின்னொளி விளையாட்டுகழகம் வருடாந்தம் வீரர்களை ஊக்குவிப்பதற்காக பெருமையுடன் நாடாத்தும் 2019ம் ஆண்டிற்கான மாங்குளம் பிறீமியர் லீக் துடுப்பாட்ட போட்டிகளை இன்றையதினம் (2019/01/20) மு/மாங்குளம் மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மாங்குளம் மின்னொளி விளையாட்டுக்கழகம் நடாத்திய போட்டியானது இன்று காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகி சிறப்பாக முடிவுற்றுள்ளது. இப் போட்டியில் மாங்குள அணி வீரர்கள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடாத்தப்பட்டன. இப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு சகிலன் தலமையிலான புதியபுரட்சி அணியினரும் நகுலேஸ் தலமையிலான பீனிக்ஸ் அணியினரும் மோதினர். இதில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற சகிலன் அணியினர் களத்தடுப்பை தெரிவு செய்ய நகுலேஸ் தலமையிலான பீனிக்ஸ் அணியினர் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர்.
துடுப்பாட்ட வரிசையில் வேந்தன் மற்றும் சுகிர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். 5 ஓவர் நிறைவிற்கு 59 ஓட்டங்களைப் பெற்றனர். இதில் வேந்தன் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சுகிர் 17ஓட்டங்களுடன் களத்தில் நிற்க அதன்பின் களமிறங்கிய அணித்தலைவர் நகுலேஸ் தொடர்ந்து நான்கு 6 ஓட்டங்களுடன் மொத்தமாக 25 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர். 60 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என களமிறங்கிய சகிலன் அணியினர் 5 ஒவர் நிறைவிற்கு 56 ஓட்டங்களை பெற்று நகுலேஸ் அணியினரிடம் 4 ஓட்டங்களால் தோல்வியிட்டனர். சகிலன் அணியினர் சார்பாக சகிலன் 7 ஓட்டங்களையும் , அனுசன் 13 ஓட்டங்களையும் , சுசி 31 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.
இச் சுற்றிலே "Runner Up champion" கிண்ணத்தை "பீனிக்ஸ்" அணியினர் தமதாக்கிக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
மாங்குளம் பிறீமியர் லீக் இன்று - 2019-01-20
Reviewed by Mankulam News
on
1/20/2019 09:59:00 pm
Rating:
No comments: