Seo Services

மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பகல் வேளையில் மண்ணெண்ணை விநியோகிக்குமாறு தவிசாளர் கோரிக்கை.........!!!


மாங்குளத்தில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின்  எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  மண்ணெண்னை விநியோகம் நிறுத்தப்பட்டமையால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே மண்ணெண்ணை விநியோகம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதனை வடமாகாண பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமையாளரை புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் பிறேமகாந் கேட்டுக்கொண்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்  இரவு ஒரு மணிக்கு டிப்பர் ரக வாகனத்துக்கு மண்ணெண்னை நிரப்பியதாக கூறியே குறித்த நிலையத்திலிருந்து மண்ணெண்னை விநியோகத்துக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது.

மண்ணெண்னை விநியோகம் நிறுத்தப்பட்டமையானது விவசாயிகளை முற்றிலும் பாதித்துள்ளது.

"தவறான நடவடிக்கையை மேற்கொண்ட எரிபொருள் நிலைய ஊழியருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதனை விடுத்து அதற்கு மாறாக மண்ணெண்ணை விநியோகத்தை நிறுத்துவதனூடக விவசாயிகளின் வயிற்றில் அடித்தல் எவ்வகையில் நியாயம் , உடனடியாக மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து மண்ணெண்ணை விநியோகம் ஆரம்பிக்கப்படவேண்டும். இரவு நேரங்களில் நடைபெறுகின்ற இவ்வாறான தவறான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் எனில் காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை மண்ணெண்னை விநியோகத்தை மட்டுப்படுத்தி வழங்கப்படவேண்டும் " என தவிசாளர் கோரியுள்ளார்
மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பகல் வேளையில் மண்ணெண்ணை விநியோகிக்குமாறு தவிசாளர் கோரிக்கை.........!!! மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பகல் வேளையில் மண்ணெண்ணை விநியோகிக்குமாறு தவிசாளர் கோரிக்கை.........!!! Reviewed by Mankulam News on 8/22/2019 12:07:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.