Seo Services

வடக்கில் 20,011 பேரும் கிழக்கில் 18,001 பேருமாக இன்று மாற்றுத்திறனாளிகள் தினம்


போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் 20,011 மாற்றுத்திறனாளிகளும் கிழக்கு 

மாகாணத்தில் 18,001 மாற்றுத்திறனாளிகளும் இன்று உலக மாற்றுத்திறனாளிகளோடுஇணைந்து 

மாற்றுத்திறனாளிகள் நாளை அனுஷ்டிக்கின்றார்கள்.

போர் நடந்த காலத்திலும், போரின் பின்னரான 

காலத்திலும்,மாற்றுத்திறனாளிகளோடு எமது சமூகம் 

பயணிக்கின்றதை இன்றுநாம் நன்றியோடு நினைவு 

கூறுகின்றோம். எம்மோடு இங்கேபயணிக்கும் அரச 

அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனஅதிகாரிகள் மற்றும் 

புலம்பெயர்ந்து கடல் கடந்துபல்லாயிரக்கணக்கான 

மைல்கள் துரத்தில் இருந்தாலும் எம் மீதுஅன்பு கொண்டு 

எம்மை அரவணைக்கும் எமது புலம்பெயர்உறவுகளுக்கும் 

எமது நன்றிகளை இந்த இடத்தில் கூறிக்கொள்கின்றோம்.

ஒரு மாற்றுத்திறனாளி என்ற நிலையில் 

ஒவ்வொருமாற்றுத்திறனாளிக்கும்அன்றாட வேலைகளைச் 

செய்வதற்கானபெரும் சவால்கள் இன்னமும் பெரும்பாலும் 

நிறைவேற்றப்படாதநிலையிலேயே வாழ்ந்து 

கொண்டிருக்கின்றார்கள். அதேவேளைமூப்பும், நோயும் 

வருகின்ற போதும் வடக்கிலும் கிழக்கிலுமாகஇருக்கின்ற 

38,012 மாற்றுத்திறனாளிகளின் எதிர்கால வாழ்வுகுறித்து 

நாங்கள் இப்போது சிந்திக்க 

வேண்டியவர்களாகஇருக்கின்றோம்.

மாற்றுத்திறனாளிகள் குறித்தான ஒரு 

கொள்கையைஉருவாக்குவதற்காக நாங்கள் முனைப்புடன் 

பாடுபட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளையும், பாதிக்கப்பட்டோரையும் 

இணைத்துநடாத்தப்பட்ட சுயமதிப்பீட்டு மாநாட்டின் 

அடிப்படையில்பாதிக்கப்பட்டோர் வேண்டி நிற்கும் 

விடயங்களைநடைமுறைப்படுத்தவல்ல சக்தி 

படைத்தவர்கள், அதிகாரத்திலுள்ளவர்களை சேர்த்து 

செயற்படுத்துவதற்கு DATA முயற்சித்து வருகிறது. நாம் 

ஒவ்வொரு சந்திப்பிலும் கேட்கும் விடயங்கள் பின்வருமாறு 

அமைகின்றன.

மாற்றுத்திறனாளிகள் குறித்தான கொள்கை

மற்றவர்களில் தங்கி வாழ்தலில் இருந்து விடுபடக்கூடிய 

அம்சங்களைஉள்ளடக்கி மாற்றுத்திறனாளிகளுக்கான 

கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு

நடைமுறையிலுள்ள மாதாந்த கொடுப்பனவிற்கு 

மேலதிகமாக மிகவும் பாதிப்பு நிலைக்குள்ளாகியுள்ள 

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் 10,000 ரூபாவிற்கு 

குறையாது கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும். 

உதாரணமாகமுள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், 

இரண்டு கைகளையும் இழந்தோர், இரண்டு கண்களையும் 

இழந்தோருக்கான மாதாந்த கொடுப்பனவுகள் 10,000 

ரூபாவிற்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்.

அணுகும் வசதி

பொது இடங்கள் அனைத்திலும் 

மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகும் வசதிகள் 

இருப்பதோடு மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்து 

ஏற்படுத்தப்பட வேண்டும்.

பராமரிப்பு இல்லங்கள்

அனைத்து வசதிகளுடன் கூடிய பராமரிப்பு இல்லங்கள் 

ஒவ்வொருமாவட்டத்திலும் உருவாக்கப்படுதல் வேண்டும்.

ஆதரவற்ற சிறுவர்கள்

ஆதரவற்ற சிறுவர்களுக்கு அவர்களது சிறுவர் பராயத்தில் 

அரசகொடுப்பனவுகள் உறுதிப்படுத்தப்படுவதோடு 

அவர்கள் வளர்ந்து வரும்நிலையில் அவர்களின் 

வாழ்க்கையை நிலைபெறச் 

செய்வதற்கானகொடுப்பனவுகளையும், 

வழிகாட்டுதல்களையும், உருவாக்குதல் வேண்டும்.

தொழில் முயற்சி

மாற்றுத்திறனாளிகளாலும், பெண் தலைமைத்துவ 

குடும்பத்தினராலும்மேற்கொள்ளப்படுகின்ற வாழ்வாதார 

முயற்சிகளுக்கான நிதி வளங்களை ஏற்படுத்த வேண்டும்.

தொழில் வாய்ப்பு

அரச வேலைவாய்ப்புக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான 

தொழில் வாய்ப்புமூன்று வீதத்திலிருந்து ஆறு வீதமாக 

உயர்த்தப்படுதலை உறுதிப்படுத்த வேண்டும்.

சட்ட அமுலாக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் 

முழுமையானஅளவில் அமுலாக்கப்பட வேண்டும்.

கல்வி

பாதிக்கப்பட்டோருக்கான விசேட கல்வி முறைகள் 

முழுமையான விதத்தில்அமுலாக்கப்பட்டு 

பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய 

வழிமுறைகளை செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு

வடக்கு கிழக்கில் உள்ள மாற்றுத்திறனாளி வீரர்கள் 

சர்வதேச அளவில்விளையாட்டுக்களில் 

பங்குபற்றுவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும்.

முதியோர் கொடுப்பனவுகள்

போரின் போது தமது பிள்ளைகளை இழந்த 

முதியவர்களுக்கான மாதாந்தகொடுப்பனவுகள் 

வழங்கப்பட வேண்டும்.



வடக்கு கிழக்கு மாகாணம் எங்கிலும் நகரப்பகுதிகளை 

மையமாகக்கொண்டும், தொலைத்தொடர்பு வசதிகளை 

பெற்றுக்கொள்ளமுடியாத கிராமங்களை மையமாகக் 

கொண்டும்மாற்றுத்திறனாளி அமைப்புக்கள் 

இயங்குகின்றன. அவற்றில் எமதுவிளையாட்டுப் 

போட்டிகளிலும் எமது சுய மதிப்பீட்டு மாநாட்டிலும்பங்கு 

கொண்ட அமைப்புகளை அவைகளின் 

தலைமையகம்அமைந்துள்ள இடத்தை மையமாக வைத்து 

இங்கே நாங்கள்பட்டியலிடுகின்றோம்.


எமது உறவுகளிடம் நாங்கள் வேண்டிக் கொள்வது 

இந்தப்பட்டியலில் இருக்கின்ற அனைத்து 

அமைப்புகளுக்கும் ஏதோ ஒருவகையில் உங்களின் 

உதவிக்கரம் நீட்ட வேண்டும். குறிப்பாகதொலைத்தொடர்பு 

வசதிகள் எதுவுமற்ற நிலையில் 

இயங்கிக்கொண்டிருக்கின்ற அமைப்புகளுக்கும் உங்கள்

அன்பு நேரடியாகச்சென்றடைய வேண்டும் என்று நாங்கள் 

விரும்புகிறோம்.


குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் 

அவர்களைநீங்கள் நாடிச் செல்ல வேண்டும். உங்களை 

நாடி வரும்  அளவிற்குஅவர்களிடம் வசதிகள் 

எதுவுமற்றநிலையில் தான் இயங்கிவருகிறார்கள் 

என்பதை இந்த மாற்றுத் திறனாளிகள் 

தினத்தில்கூறிக்கொள்கிறோம். அவர்களுக்கு உங்கள் 

அன்பு சென்றடைந்து, அவர்கள் வாழ்வில் ஒரு மாற்றம் 

ஏற்பட வேண்டும் என்று இந்தஉலக மாற்றுத் திறனாளிகள் 

தினத்தில் நாம் வேண்டிநிற்கின்றோம்.



அம்பாறை மாவட்டம்

1  புதுயுகம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு விநாயகபுரம்

2  S.R.K. மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

3  பொத்துவில் விசேட தேவையுடையோர் ஒன்றியம்

4  பொத்துவில் செவிப்புலனற்றோர் சமூகசேவை ஆணைக்குழு

5  சம்மாந்துறை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

6  மதிஒளிமாற்றுத்திறனாளிகள் சங்கம் (நாவிதன்வெளி)

7  R.K.M.விசேட அமைப்பு

8  அக்கரைப்பற்று மாற்றுத்திறனாளிகள் சங்கம்

9  காரைதீவு மாற்றுத்திறனாளிகள் சங்கம்

10   அம்பாறை மாவட்ட அணி

திருகோணமலை

11   சேருநுவர சிவசக்தி மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

12   வெருகல் கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

13   மூதூர் ஆற்றல் வள நிலையம்

14   மூதூர் மாற்றத்திறனாளிகள் நலன்புரி நிலையம்

15   திருகோணமலை மாற்றுத்திறனாளிகள் நலன்புரி சங்கம்

16   திருகோணமலை மாவட்ட அணி

மட்டக்களப்பு மாவட்டம்

17   ஏர்முனை செங்கலடி

18   ஏறாவூர் நகர் சமாசம்

19   காத்தான்குடி பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம்

20   ஆரையம்பதி சமூக உள்வாங்கல் அமைப்பு

21   வெல்லாவெளி கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

22   பட்டிப்பளை உதய ஒளி

23   வாழ்வகம் விசேடதேவையுடையோர் அமைப்பு

24   வாழைச்சேனை ஒளிமயம் மாற்றுத்திறனாளி அமைப்பு

25   டிசா மாற்றுத்திறனாளி அமைப்பு (களுவாஞ்சிகுடி-9)

26   புதிய பாதை (கிரான்)

27   எதிர் நீச்சல் (சத்துருகொண்டான்)

28   வாழ்வின் உதயம் (வாழைச்சேனை)

29   ஆரோக்கியா மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

30   ஓசானம் மனவளர்ச்சி குன்றியோர் இல்லம்

31   வாழ்வோசை Y.M.C.A

32   சென் ஜோசப் பாடசாலை

33   உதயம் விழிப்புலனற்றோர் சங்கம்

34   தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை

35   மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம்

36   ஸிமிர்னா விசேடதேவையுடையோர் இல்லம்

37   ஓட்டமாவடி மத்தி ஒளியம்

38   கோரளைப்பற்று மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

39   மென்கெப்

40   சாஹிரா விசேட தேவையுடையோர் பாடசாலை

41   Humanaid

42   புகலிடம் நிலையம் (நாவக்கேணி)

43   சாசலியா வித்தியாலயம்

44   சாம்சாம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

வவுனியா

45   SEED

46   ஓர்கான்

47   மாற்றுவலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம்வன்னி

48   வவுனியா மாற்றத்திறனாளிகள் சம்மேளனம்

முல்லைத்தீவு

49   ஒளிரும்வாழ்வு (துணுக்காய்)

50   ஒளிரும்வாழ்வு புதுக்குடியிருப்பு

51   பீனிக்ஸ்

52   உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோர்அமைப்பு

53   தாமரை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

54   முல்லைமலர் சங்கம்

கிளிநொச்சி

55   வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்

56   கிளிநொச்சி மாற்றத்திறனாளிகள் சம்மேளனம்

யாழ்ப்பாணம்      

57   ஜெய்பூர்

58   மாற்றுவலுவுள்ளோருக்கான பெதஸ்ராவின்தரிசனம்

59   வாழ்வகம்

60   யாழ் விழிப்புலனற்றோர் சங்கம்

61   ARK (பெட்டகம்)

62   வடமராட்சி செவிப்புலன் அற்றோர் நிறுவனம்

63   சிவபூமி பாடசாலை

64   வலயக்கல்வி பணிமனை யாழ்ப்பாணம்

65   மாற்றுத்திறனாளிகளுக்கான பணியகம்

66   மாற்றுவலுவுடையோர் புனர்வாழ்வு நிறுவனம்

67   செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனம்

68   நபீல்ட் விழிப்புலன் செவிப்புலன் இழந்தோர்பாடசாலை

மன்னார்

69   வாழ்வுதயம்

70   மன்னார் மாவட்ட தேனீ மாற்றுத்திறனாளிகள் சுயஉதவி அமைப்பு

71   மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வுசங்கம்

வடக்கில் 20,011 பேரும் கிழக்கில் 18,001 பேருமாக இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் வடக்கில் 20,011 பேரும் கிழக்கில் 18,001 பேருமாக இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் Reviewed by Mankulam News on 12/03/2019 01:37:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.