Seo Services

நாளை முதல் 17 வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைளுக்கும் விடுமுறை

நாளை முதல் 17 வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைளுக்கும் விடுமுறை


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் மேலும் உக்கிரமடையும் பட்சத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகள் , அறநெறி பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் என்பவற்றுக்கு மீண்டும் விடுமுறை வழங்கி அனைவரதும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு கொவிட் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளினதும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக கல்வி பணிப்பாளர் தலைமையில் கல்வி அமைச்சில் தகவல் மத்திய நிலையமொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் நிலைமையைக் கருத்திற் கொண்டு கல்வி கட்டமைப்பிற்குள் உள்ளடங்கும் மாணவர்கள் , ஆசிரியர்கள் , அதிபர்கள் மற்றும் ஏனைய அனைத்து கல்வித்துறை சார் அதிகாரிகளின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் கல்வி அமைச்சு மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்காக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கமைய கல்வி அமைச்சில் மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார மேம்பாட்டு அதிகாரிகளை உள்ளடக்கிய தகவல் மத்தியநிலையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் மத்திய நிலையம் கல்வி பணிப்பாளரின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மத்திய நிலையத்தை 1988 என்ற அவசர தொலைபேசி இலக்கம் மூலமும் 011-2785818 என்ற பெக்ஸ் இலக்கத்தினூடாகவும் info@moe.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக் கூடாகவும் தொடர்பு கொள்ள முடியும்.

மேற்குறிப்பிடப்பட்ட இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் அதிபர்கள் , கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் தாம் பணிபுரியும் இடம் மற்றும் பிரதேசத்தில் கொவிட் - 19 தொடர்பில் தகவல்களை வழங்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் மத்திய நிலையத்தின் ஊடாக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மாகாண வலயங்கள் மற்றும் தொகுதிக்குள் வைரஸ் பரவல் நிலைமை தொடர்பில் பாடசாலைகள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதோடு அந்த தகவல்கள் குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை முகாமைத்துவப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கல்வி அமைச்சு தொடர்ச்சியாக கல்வித்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைவரதும் சுகாதார பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மேலும் தீவிரமடையும் பட்சத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகள் , அறநெறி பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் என்பவற்றுக்கு மீண்டும் விடுமுறை வழங்கி அனைவரதும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது


#Copy jvpnews.com

நாளை முதல் 17 வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைளுக்கும் விடுமுறை நாளை முதல் 17 வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைளுக்கும் விடுமுறை Reviewed by Mankulam News on 7/12/2020 09:20:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.