Seo Services

பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு....!

10/14/2019 08:35:00 pm



பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் ஒரு புரிதல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர் அடிப்படையில் எதை வேண்டி நிற்கிறார்கள் என்ற விடயத்தை ஆராயும் பொருட்டு  DATA    அமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் உடனான கலந்துரையாடல் யாழ் நகர் Green Grass Hotel Tulip Hall இல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் சுயமதிப்பீட்டு மாநாடு பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.

மாநாடும் அதன் பின்னரான செயற்பாடுகளையும் ,DATA   அமைப்பின் நோக்கங்கள் செயல்பாடுகளை விளக்கும் நோக்கோடும் இந்த கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டது.

வட மாகாணத்தில் மட்டும் 20,011 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக சமூக சேவைத் திணைக்களம் கணக்கிட்டு வெளியிட்டுள்ளது என்ற தகவலை DATA  அமைப்பு பகிர்ந்ததோடு இந்த மாற்றுத்திறனாளிகள் இன்னமும் பத்து வருடங்களில் எந்த நிலையில் வாழப் போகிறார்கள் என்று நாங்கள் சிந்திக்கத் தலைப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தது.

மாற்றுத்திறனாளிகளை போல் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், போரில் பெற்றோரை இழந்த சிறுவர்கள், போரினால் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் ஆகியோரின் விதிகளை இன்னும் 10 வருடங்களில் அவரது வாழ்வியல் எவ்வாறு இருக்கப் போகின்றது என்றும் நாங்கள் சிந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் போது சிரேஸ்ர பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக சேவை திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்டோர் குறித்தான பரந்த புரிதலோடு அவர்களுடைய அபிலாசைகளையும், அவர்களுக்குரிய தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு பாதிக்கப்பட்டோரோடு நாங்கள் அனைவரும் இணைந்து பயணிப்பது பற்றி ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்து, இனிவரும் காலங்களில் தங்களது பணிகளையும், இவர்களுக்கான சேவையினையும் இன்னும் விரிவுபடுத்துவதற்காக அவர்கள் முன் வந்தமைக்கு தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு - DATA     நன்றி பாராட்டுகிறது.   






பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு....! பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு....! Reviewed by Mankulam News on 10/14/2019 08:35:00 pm Rating: 5

மாங்குளத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் போராட்டம்.......!!!!

9/08/2019 03:41:00 pm


இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் வட தமிழீழம் மாங்குளத்தில் OMP யை வெளியேறக்கூறியும் 6000 ரூபா மாதாந்த இழப்பீட்டிற்கு எதிர்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்றது

சிறீலங்கா அரசு, காணாமல் ஆக்கப்பட்ட நபர்களுக்கான அலுவலகத்தை  இப்போது வடக்கு கிழக்கில் நிறுவ கடுமையாக உழைத்து வருகிறது.  அது திறம்பட செயல்பட்டு வருகிறது  என்பதை உலக நாடுகளுக்கு  காட்டுவதற்கு ஸ்ரீலங்கா முயற்சிக்கிறது. இது ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் , குறிப்பாக உதவி மற்றும் ஜி.எஸ்.பி, வரி இல்லாத ஏற்றுமதியை வழங்கும் நாட்டிற்கு ஒரு காட்சி பொருளாகும்.

அப்பாவி தமிழர்களுக்கு தான்   செய்த போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படலாம் என்று ஸ்ரீலங்கா  பயப்படுகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்  தீர்மானங்கள் ஸ்ரீலங்காவை  பல பணிகளைச் செய்யுமாறு கோரியிருந்தன. அக்டோபர் 2015 இல் இது ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, ​​தீர்மானம் 30 கீழ் 01 ஸ்ரீலங்கா  அரசாங்கத்தால் எடுக்கப்படும்  நடவடிக்கைக்கான ஒரு வகையான வரைபடமாக கருதப்பட்டது.

ஸ்ரீலங்காவின்  மொத்தம் சுமார் 25 குறிப்பிட்ட உறுதிமொழிகள் உள்ளன, இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள நிலங்களை பொதுமக்கள் உரிமையாளர்களுக்கு திருப்பித் தருவது, காணாமல் ஆக்கப்பட்டோரை  கண்டுபிடிப்பதற்கான ஒரு பொறிமுறையை அமைத்தல் மற்றும் முக்கியமாக, போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க சர்வதேச ஈடுபாட்டுடன் ஒரு நீதிப்  பொறிமுறையை நிறுவுதல். முழு அளவிலான நடவடிக்கைகள் பெரும்பாலும் 'இடைக்கால நீதி' என்ற குடை லேபிளின் கீழ் குறிப்பிடப்படுகின்றன.

இதுவரை எதுவும் செயல்படுத்தப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட நபர்களுக்கான அலுவலகம்  ஒரு போலி அமைப்பாக உருவாகியுள்ளது. இந்த ஸ்ரீலங்கா  உருவாக்கிய  அலுவலகத்தின்  ஆவணத்தில் கையெழுத்திடுவதன் மூலம் தங்கள் குழந்தைகளையும் மற்றவர்களையும் காணவில்லை என்றே இந்த பெற்றோர்களை ஏற்றுக்கொள்ளச் செய்ய  விரும்புகிறார்கள்.

பட்டியலிடப்பட்ட இந்த பெயர்களை இறுதியில் இலங்கை அரசாங்கம் அறிவிக்க உள்ளது . காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்திற்கு  குறிப்பிட்ட காலத்திற்கு 6000 ரூபாயை ஏற்குமாறு லஞ்சம் கொடுப்பதால், காணாமல் ஆக்கப்பட்டோரை பற்றி  அக்கறை கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா  உலகுக்குக் காட்டுகிறது.

இந்த ஓ. எம். பி.  இன் நோக்கம், காணாமல் போன அனைத்து தமிழர்களையும் பட்டியலிடுவதும், இறுதியில் அனைவரும் இறந்துவிட்டதால் அவர்கள்  அனைவரையும் யாரும் கண்டுபிடிக்கத் தேவையில்லை என்றும், போர் குற்றங்கள் பற்றிய விசாரணையை தவிர்க்கலாம் என்றும் ஸ்ரீலங்காவுக்கு ஒரு போலி நம்பிக்கை.

காணாமல் ஆக்கப்பட்டோரை  கண்டுபிடித்து அவர்களுக்கு என்ன ஆனது என்று  பொறுப்புக்கூற வேண்டும் என்பதே  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்  ஆணை.

1980 களில் இருந்து காணாமல் போன மக்களை தவிர்ப்பது,  இது OMP நேர்மையானது அல்ல என்பதைக் காட்டுகிறது.

OMP  செயல்படுகிறது என்பதை UNHRC க்குக் காண்பிப்பது எல்லாம்  சர்வதேச விசாரணைகளை தவிர்ப்பதற்காக.

தகவலறிந்த வட்டாரங்களின்படி, அவர்கள் ஒப்புக்கொண்ட எல்லாவற்றிலும் ஸ்ரீலங்கா  அமுல்படுத்தாவிட்டால் , இலங்கையின்  போர்க்குற்றம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பரிந்துரைக்கப்படும்.

இப்போது சில தமிழ் அரசியல்வாதிகள் இலங்கையை சர்வதேச விசாரணையில் இருந்து காப்பாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களாகிய நாம் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். காணாமல்போன எங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலே எங்களுக்கு  மிகவும் தேவையானவை.

எந்தவொரு தமிழர்களையும் மீண்டும் ஸ்ரீலங்காவுக்கு  நாடு கடத்த வேண்டாம் என்றும் ஆஸ்திரேலிய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். அரசியல் தீர்வு இல்லாத வரை, நாடு திரும்பும் தமிழர்களுக்கு  ஸ்ரீலங்காவில்  பாதுகாப்பு இல்லை.

இந்த நாட்டிற்கு ஒரு அரசியல் தீர்வு மிகவும் மோட்சமாக தேவை. தமிழர்கள் விரும்பும் அரசியல் எதிர்காலம் என்ன என்று கேட்க சர்வஜன  வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அரசியல் தீர்வு இல்லாத வரைக்கும் இந்த நாடு நரகத்திற்கே செல்லும்.

ஸ்ரீலங்காவுக்கு   சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்றங்களுக்கு தண்டனை கிடைத்தால் ,  ஸ்ரீலங்கா  நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஸ்ரீலங்கா  இழப்பீடு வழங்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கட்டாயப்படுத்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 2 கோடி ரூபாய் கொடுக்கப்பட வேண்டும். 25,000 தர  2 கோடியை கற்பனை செய்து பாருங்கள். காணாமல்போனவர்களின் பெற்றோருக்கு இந்த OMP இன் 6000 ரூபாய் கட்டணம், 2 கோடி ரூபாய் கொடுப்பனவைத் தவிர்ப்பதாகும். ஸ்ரீலங்கா  போர்க்குற்றங்களுக்கு தண்டனை பெற்றால் மற்றும் அவர்கள் இழப்பீடு வழங்கத் தவறினால், அவர்களின் வெளிநாட்டு சொத்து மற்றும் வெளிநாட்டு வங்கியிடமிருந்து அவர்களின்  பணம் ஆகியவை இழப்ப
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கம்.


மாங்குளத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் போராட்டம்.......!!!! மாங்குளத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் போராட்டம்.......!!!! Reviewed by Mankulam News on 9/08/2019 03:41:00 pm Rating: 5

மாங்குளம் சந்தை - பேரூந்து தரிப்பிட வீதி புனரமைப்பிற்கு 7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.....!!!

8/31/2019 05:18:00 pm

மாங்குளம் நகர் பகுதியின் அதி முக்கிய தேவையாக இருந்த சந்தை, பேருந்து தரிப்பிடம் புகையிரத நிலையம் என்பவற்றிற்கான பாதையானது நேற்றைய தினம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களின் முயற்சியால் ரூபாய் ஏழு மில்லியன் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் புனரமைப்பு வேலைக்கான ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த வீதி புனரமைப்பினூடாக மாங்குளம் நகர் பகுதியில் காணப்படுகின்ற சந்தை பேருந்து தரிப்பிட நிலையம் போன்றவற்றிற்கு செல்கின்ற மக்கள் தமது போக்குவரத்தினை இலகுபடுத்திக் கொள்ள முடியும் அத்தோடு சந்தை பகுதியானது வளர்ச்சி அடையவும் இது உறுதுணையாக அமையும்.



மாங்குளம் சந்தை - பேரூந்து தரிப்பிட வீதி புனரமைப்பிற்கு 7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.....!!! மாங்குளம் சந்தை - பேரூந்து தரிப்பிட வீதி புனரமைப்பிற்கு 7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.....!!! Reviewed by Mankulam News on 8/31/2019 05:18:00 pm Rating: 5

உலகச் சிறுவர் நலன் காப்பகத்தின் தலைமை பணிமனை மாங்குளத்தில் திறந்துவைப்பு.....!!!

8/28/2019 08:16:00 pm

உலகச் சிறுவர் நலன் காப்பகத்தின் தலைமை பணிமனை A9 வீதி மாங்குளம் பகுதியில் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியும், சிவனருள் வடமாகாண பணிப்பாளருமான வைத்தியர் திரு இ.கஜேந்திரா அவர்களும், மாங்குளம் பங்கு தந்தையும்,  சிவன் ஆலய குருக்களும், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் வங்கி முகாமையாளர்கள், தபால் அலுவலக உத்தியோகஸ்தர்கள், உலகச் சிறுவர் நலன் காப்பகத்தின் மாவட்ட இணைப்பாளர்கள்,  இளந்தளிர் கல்வி நிலைய ஆசிரியர்கள், பிள்ளைகள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய நிலையில் உள்ள 80 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், 03 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் நிவேதா பாலகுமார் அவர்களின் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மேலும் முன்னாள் போராளியான அண்ணாமலை லோகேஸ்வரன் அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூ 128,500.00 பெறுமதியான நீர்பம்பியும் பணமும் சாம்பவி வேலழகன் அவர்களின் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அத்தோடு தாய் தந்தையை இழந்த இரண்டு பிள்ளைகளுக்கான மாதாந்த கல்வி உதவித் தொகையாக 5000.00 ரூபாவை மாதந்தம் வழங்க கனகசபை குணரட்னம் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான பணமும் இன்றைய நிகழ்வின்போது வழங்கிவைக்கப்பட்டது.





உலகச் சிறுவர் நலன் காப்பகத்தின் தலைமை பணிமனை மாங்குளத்தில் திறந்துவைப்பு.....!!! உலகச் சிறுவர் நலன் காப்பகத்தின் தலைமை பணிமனை மாங்குளத்தில் திறந்துவைப்பு.....!!! Reviewed by Mankulam News on 8/28/2019 08:16:00 pm Rating: 5

விசேட திறனுடைய சிறுவர்களுக்கான செயலமர்வு மாங்குளத்தில்..........!!!

8/28/2019 08:07:00 pm

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் மனிதம் அமைப்பினால் மாங்குளம் அமதிக்கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் விஷேட திறன்கொண்ட சிறுவர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வு அமதிக்கரங்கள் நிறுவனத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இச் செயலமர்வில் வளவாளர்களாக திரு.லசாகன் (Founder of natural energy world, clinical psychologist & holistic alternative medicine therapist), திரு.ரொபின்சன் (சமூக செயற்பாட்டாளர்), Dr.அர்ச்சுதன் (ஆரம்ப சுகாதார பராமரிப்பு அலகு, கண்டாவளை) ஆகியோர் கலந்துகொண்டனர்.




விசேட திறனுடைய சிறுவர்களுக்கான செயலமர்வு மாங்குளத்தில்..........!!! விசேட திறனுடைய சிறுவர்களுக்கான செயலமர்வு மாங்குளத்தில்..........!!! Reviewed by Mankulam News on 8/28/2019 08:07:00 pm Rating: 5

வடக்கு ஆளுநர் தலைமையில் திருக்குறள் பெருவிழா முல்லைத்தீவில் இன்று ஆரம்பம்........!!!

8/23/2019 05:09:00 pm

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் நெறிப்படுத்தலில் வடமாகாணத்தில் முதன்முறை இடம்பெறும் திருக்குறள் பெருவிழா 'தொட்டணைத்தூறும் மணற்கேணி'  என்னும் தலைப்பில் முல்லைத்தீவு ஊற்றுங்கரை சித்திவிநாயகர் ஆலய மண்டபத்தில் வடமாகாண கௌரவ ஆளுநர் தலைமையில் இன்று (23) ஆரம்பமானது.

வடமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இன்றைய நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் திருக்குறள் புத்தகம் மற்றும் திருக்குறள் ஸ்டிக்கர் என்பன வெளியிடப்பட்டதுடன்  நிகழ்வில் கௌரவ ஆளுநரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மாணவர்கள் இருவருக்கு திருக்குறள் படம் ஆளுநர் அவர்களால் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்கள் உரையாற்றுகையில், முல்லை மாவட்டம் தண்ணீரை கடந்து குருதியிலே நடந்து தீயை கண்டு தீண்டாமையை கண்டு இன்னும் வாழமுடியும் என்று சொல்லும் மாபெரும் மாவட்டம்  ஆகும். நான்கு இராணுவங்கள் கடந்து சென்றும் எங்கள் வாழ்க்கையை யாரும் பறித்துக்கொள்ளமுடியாது என்று உலகிற்கு சொல்கின்ற மக்கள் இங்கு இருக்கின்றனர். அதனால் தான் ஜனாதிபதியை மூன்று முறை இந்த மண்ணிற்கு கொண்டுவந்துள்ளேன். முல்லையில் இருக்கும் வேதனையை வெளிப்படையாக சொல்லமுடியாவிட்டாலும் மிகவும் அறிந்தவர் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள். அதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு இருக்கின்றோம் என்றும் கௌரவ ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டார்.

திருவள்ளுவரை பற்றி பல்கலைக்கழகம் அதிகளவில் ஆராயவேண்டும் அதுவே என் வேண்டுகோள்.  நான் அறிந்தவரையில் யாழ் பல்லைக்கழகத்தில் திருவள்ளுவரையோ திருக்குறளையோ பற்றி கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள் இன்றுவரை  யாரும் இல்லை. இது ஒரு மாபெரும் குறை. இந்த விழா முடியும் போது திருக்குறளுக்கான பாடநெறியை பல்கலைக்கழக ரீதியில் முன்வையுங்கள் இதுவே என் வேண்டுகோள். இந்த யோசனையை நான் ஆதரிக்க விரும்புகின்றேன். அதற்கான நிதியைக்கூட நான் தர முன்வருகின்றேன் என்று ஆளுநர் அவர்கள் சுட்டிக்காட்டினார். மேலும் நவம்பர் மாத இறுதியிலே நாங்கள் சர்வதேச தமிழ்தினம் கொண்டாட வேண்டும் என்ற விருப்பம் உண்டு என்றும் கௌரவ ஆளுநர் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வு இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதிவரை வவுனியா (24) , மன்னார் (25), கிளிநொச்சி(26) , தென்மராட்சி (27) ,பருத்தித்துறை பிரதேச செயலகம் (28), இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியிலும் (29) இறுதி நாளான 30ஆம் திகதி யாழ் மாநகரசபை மண்டபத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









வடக்கு ஆளுநர் தலைமையில் திருக்குறள் பெருவிழா முல்லைத்தீவில் இன்று ஆரம்பம்........!!! வடக்கு ஆளுநர் தலைமையில் திருக்குறள் பெருவிழா முல்லைத்தீவில் இன்று ஆரம்பம்........!!! Reviewed by Mankulam News on 8/23/2019 05:09:00 pm Rating: 5

மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பகல் வேளையில் மண்ணெண்ணை விநியோகிக்குமாறு தவிசாளர் கோரிக்கை.........!!!

8/22/2019 12:07:00 pm

மாங்குளத்தில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின்  எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  மண்ணெண்னை விநியோகம் நிறுத்தப்பட்டமையால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே மண்ணெண்ணை விநியோகம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதனை வடமாகாண பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமையாளரை புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் பிறேமகாந் கேட்டுக்கொண்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்  இரவு ஒரு மணிக்கு டிப்பர் ரக வாகனத்துக்கு மண்ணெண்னை நிரப்பியதாக கூறியே குறித்த நிலையத்திலிருந்து மண்ணெண்னை விநியோகத்துக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது.

மண்ணெண்னை விநியோகம் நிறுத்தப்பட்டமையானது விவசாயிகளை முற்றிலும் பாதித்துள்ளது.

"தவறான நடவடிக்கையை மேற்கொண்ட எரிபொருள் நிலைய ஊழியருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதனை விடுத்து அதற்கு மாறாக மண்ணெண்ணை விநியோகத்தை நிறுத்துவதனூடக விவசாயிகளின் வயிற்றில் அடித்தல் எவ்வகையில் நியாயம் , உடனடியாக மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து மண்ணெண்ணை விநியோகம் ஆரம்பிக்கப்படவேண்டும். இரவு நேரங்களில் நடைபெறுகின்ற இவ்வாறான தவறான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் எனில் காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை மண்ணெண்னை விநியோகத்தை மட்டுப்படுத்தி வழங்கப்படவேண்டும் " என தவிசாளர் கோரியுள்ளார்
மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பகல் வேளையில் மண்ணெண்ணை விநியோகிக்குமாறு தவிசாளர் கோரிக்கை.........!!! மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பகல் வேளையில் மண்ணெண்ணை விநியோகிக்குமாறு தவிசாளர் கோரிக்கை.........!!! Reviewed by Mankulam News on 8/22/2019 12:07:00 pm Rating: 5

மாங்குளம் மண்ணெண்ணெய் விநியோக இயந்திரத்துக்கு சீல்......!!!

8/20/2019 08:34:00 pm


மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் முறைக்கேடாக வாழங்கியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நிலையத்தின் மண்ணெண்ணைய் விநியோக இந்திரத்துக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவமொன்று, நேற்று  (19) இடம்பெற்றுள்ளது.
மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில், மக்களின் விவசாய செய்கைக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயானது, டிப்பர் வாகனங்களுக்கு வழங்கும் எண்ணெய் என புதுக்குடியிருப்பு பிரதேச பை உறுப்பினர் முகுந்தகஜனால் அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நேற்று முன்தினம் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்று, அங்குள்ள மண்ணெண்ணெய் விநியோக இந்திரத்துக்கு சீல் வைத்தனர்.
இதேவேளை, வவுனியா வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடான எரிபொருள் விநியோக சேவையிலும் மக்கள் திருப்தியான பயனை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாக, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மு.முகுந்தகஜன் தெரிவித்துள்ளார்.
மாங்குளம் மண்ணெண்ணெய் விநியோக இயந்திரத்துக்கு சீல்......!!! மாங்குளம் மண்ணெண்ணெய் விநியோக இயந்திரத்துக்கு சீல்......!!! Reviewed by Mankulam News on 8/20/2019 08:34:00 pm Rating: 5

மாங்குளம் உயிரிழையில் உணவகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது......!!!

8/20/2019 04:13:00 pm

உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர் அமைப்பின் பயனாளிகளின் நிரந்தர நிதியீட்டத்துக்கான நிரந்தர வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் முகமாக நவீன முறையிலான உணவகம் ஒன்றினை அமைத்து அதனூடாக கிடைக்கப்பெறும் வருமானத்தின் மூலம் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் புதிய உணவகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (2019-08-19)  காலை 10.00 மணியளவில் உயிரிழை அமைப்பின் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள புதிய இடத்தில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

குறித்த உணவகம் அமைப்பதற்கு அன்னைமடி அமைப்பு ஒழுங்குபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுக்காக உயிரிழை அமைப்பின் பயனாளிகளுடன் கனடாவில் இருந்து வருகை தந்த திரு.இராசையா சிவகுமாரன், திரு.பாலசந்திரன் நித்தியானந்தம் திருமதி.செந்தூரி சிவகுருநாதன் திரு.S புவனேந்திரராஜா ஆகியோர் மற்றும் சமூக ஆர்வலர் திரு.ஈழவாணன் மற்றும் உயிரிழை அமைப்பின் அலுவலகர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.





மாங்குளம் உயிரிழையில் உணவகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது......!!! மாங்குளம் உயிரிழையில் உணவகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது......!!! Reviewed by Mankulam News on 8/20/2019 04:13:00 pm Rating: 5

மாங்குளத்தில் "அறிவூற்று" இலவசக் கல்வி நிலையம் பல தடைகளைத் தாண்டி இன்று ஆரம்பம்.........!!!

8/18/2019 03:24:00 pm

மாங்குளத்தில் உள்ள வறிய மாணவா்களின் கல்வி மேம்பாட்டுக்கு என புலம்பெயா் உறவுகளின் உதவியுடன் அறிவூற்று எனும் இலவச கல்வி நிலையம் இன்று (2019/08/18) திறந்து வைக்கப்பட்டது.

இதில் தரம் 6 முதல் க.பொ.த சாதாரண தரம் வரையிலான மாணவா்கள் இலவசமாக கற்க முடியும்.

இந்த இலவச கல்வி நிலையம் அமைப்பதை தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தடைகளை தாண்டி இக் கல்வி நிலையம் இன்று திறக்கப்பட்டுள்ளது.
போரால் முற்று முழுதாக அழிந்து போய் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள பிரதேசமான மாங்குளத்தில் கல்வியினை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறான வேலைகளை முன்னெடுக்கும் மாங்குளம் இளைஞர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள்!
இதே போல ஏனைய இடங்களிலும் இவ்வாறான செயற்பாடுகளை செய்வதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும்.



மாங்குளத்தில் "அறிவூற்று" இலவசக் கல்வி நிலையம் பல தடைகளைத் தாண்டி இன்று ஆரம்பம்.........!!! மாங்குளத்தில் "அறிவூற்று" இலவசக் கல்வி நிலையம் பல தடைகளைத் தாண்டி இன்று ஆரம்பம்.........!!! Reviewed by Mankulam News on 8/18/2019 03:24:00 pm Rating: 5
ads 728x90 B
Powered by Blogger.