உலகச் சிறுவர் நலன் காப்பகத்தின் தலைமை பணிமனை A9 வீதி மாங்குளம் பகுதியில் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியும், சிவனருள் வடமாகாண பணிப்பாளருமான வைத்தியர் திரு இ.கஜேந்திரா அவர்களும், மாங்குளம் பங்கு தந்தையும், சிவன் ஆலய குருக்களும், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் வங்கி முகாமையாளர்கள், தபால் அலுவலக உத்தியோகஸ்தர்கள், உலகச் சிறுவர் நலன் காப்பகத்தின் மாவட்ட இணைப்பாளர்கள், இளந்தளிர் கல்வி நிலைய ஆசிரியர்கள், பிள்ளைகள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய நிலையில் உள்ள 80 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், 03 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் நிவேதா பாலகுமார் அவர்களின் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மேலும் முன்னாள் போராளியான அண்ணாமலை லோகேஸ்வரன் அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூ 128,500.00 பெறுமதியான நீர்பம்பியும் பணமும் சாம்பவி வேலழகன் அவர்களின் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அத்தோடு தாய் தந்தையை இழந்த இரண்டு பிள்ளைகளுக்கான மாதாந்த கல்வி உதவித் தொகையாக 5000.00 ரூபாவை மாதந்தம் வழங்க கனகசபை குணரட்னம் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான பணமும் இன்றைய நிகழ்வின்போது வழங்கிவைக்கப்பட்டது.
உலகச் சிறுவர் நலன் காப்பகத்தின் தலைமை பணிமனை மாங்குளத்தில் திறந்துவைப்பு.....!!!
Reviewed by Mankulam News
on
8/28/2019 08:16:00 pm
Rating:
No comments: