Seo Services

பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு....!




பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் ஒரு புரிதல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர் அடிப்படையில் எதை வேண்டி நிற்கிறார்கள் என்ற விடயத்தை ஆராயும் பொருட்டு  DATA    அமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் உடனான கலந்துரையாடல் யாழ் நகர் Green Grass Hotel Tulip Hall இல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் சுயமதிப்பீட்டு மாநாடு பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.

மாநாடும் அதன் பின்னரான செயற்பாடுகளையும் ,DATA   அமைப்பின் நோக்கங்கள் செயல்பாடுகளை விளக்கும் நோக்கோடும் இந்த கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டது.

வட மாகாணத்தில் மட்டும் 20,011 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக சமூக சேவைத் திணைக்களம் கணக்கிட்டு வெளியிட்டுள்ளது என்ற தகவலை DATA  அமைப்பு பகிர்ந்ததோடு இந்த மாற்றுத்திறனாளிகள் இன்னமும் பத்து வருடங்களில் எந்த நிலையில் வாழப் போகிறார்கள் என்று நாங்கள் சிந்திக்கத் தலைப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தது.

மாற்றுத்திறனாளிகளை போல் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், போரில் பெற்றோரை இழந்த சிறுவர்கள், போரினால் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் ஆகியோரின் விதிகளை இன்னும் 10 வருடங்களில் அவரது வாழ்வியல் எவ்வாறு இருக்கப் போகின்றது என்றும் நாங்கள் சிந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் போது சிரேஸ்ர பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக சேவை திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்டோர் குறித்தான பரந்த புரிதலோடு அவர்களுடைய அபிலாசைகளையும், அவர்களுக்குரிய தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு பாதிக்கப்பட்டோரோடு நாங்கள் அனைவரும் இணைந்து பயணிப்பது பற்றி ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்து, இனிவரும் காலங்களில் தங்களது பணிகளையும், இவர்களுக்கான சேவையினையும் இன்னும் விரிவுபடுத்துவதற்காக அவர்கள் முன் வந்தமைக்கு தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு - DATA     நன்றி பாராட்டுகிறது.   






பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு....! பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு....! Reviewed by Mankulam News on 10/14/2019 08:35:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.