கொழும்பைச் சேர்ந்த அமரர் பிரபாகரன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருமதி. பிரபாகரன் அவர்கள் வழங்கிய நிதி அன்பளிப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் அமைந்துள்ள முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழை அமைப்பில் கடந்த கால யுத்த நிலைமைகளின் போது பாதிக்கப்பட்டு வீடுகளிலும் உறவினாராலும் பாரமரிக்க முடியாத முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கான இல்லத்தில் வாழ்ந்து வரும் பயனாளிகளின் உணவுத் தேவையினை பூர்த்தி செய்துகொள்ளும் முகமாக ரூபா 15000 பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான தீர்வுகோரி முல்லைத்தீவில் நடைபெற்று வரும் தொடர்ச்சியான சத்வீக போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நேற்றைய தினம் ரூபா 10000 பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் மூலம் உதவி வழங்கல்.........!!!!
Reviewed by Mankulam News
on
6/12/2019 03:12:00 pm
Rating:

No comments: