Seo Services

முல்லையின் புலமைச் சாதனை நாயகி ஜனாதிபதியினால் கௌரவிப்பு........!!!!!


கடந்த 2018ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முல்லைத்தீவு மாமடு பழம்பாசி அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் தாயின் அரவனைப்பில் வாழ்ந்து வரும் மாணவி செல்வி. இராசரூபன் துச்சாதனா அவர்கள் 195 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையைப் பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை காலமும் யாரும் எட்ட முடியாத அல்லது அடைந்திராத இலக்கை அடைந்து வரலாற்றுச் சாதனையாகப் பதியப்பட்டது.

போரினால் பாதிக்கப்பட்ட மிகவும் பின் தங்கிய பகுதியில் அடிப்படை வசதிகள் கூட போதியளவு இல்லாமல் இயங்கி வரும் ஆரம்பப் பிரிவுப் பாடசாலையில் தரம் 01 தொடக்கம் தரம் 05 வரை உள்ள வகுப்புக்களில் மொத்தமாக 22மாணவகளே கல்வி கற்று வந்தனர். அதிபர் உட்பட நான்கு ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

2018  தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 5 மாணவர்கள் தோற்றியுள்ளனர். இரண்டு மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். ஏனைய மாணவர்கள் 150 மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

பாடசாலை அதிபரின் வழிகாட்டுதலும் வகுப்பாசிரியர் துவாரகனின் அர்ப்பணிப்புமே இவ் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

தனியார் கல்வி நிலையங்கள் எமது பகுதியிலே இல்லை எனவே யாழ்/சென்ஜோன்ஸ் மாணவர்களினால் தண்டுவான் அ.த.க.பாடசாலை விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட DVIO இலவசக் கல்விக்கூடத்தில் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் நடாத்தப்பட்ட. இலவச வகுப்புக்களும், புலம்பெயர் அமைப்புக்கள், மக்களின் நிதியுதவியுடன் நடாத்தப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்குகளும் இவ் வெற்றிக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய கல்வி வலயமாக பிரிக்கப்பட்ட 25 ஆண்டுகளில் துணுக்காய் வலயதிலிருந்து முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்ற மாணவி என்கின்ற பெருமையினையும் செல்வி. இ.துச்சாதனா துணுக்காய் கல்வி வலயத்திற்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

இன் நிலையில் நேற்றுமுன்தினம் (08-05-2019) முல்லைத்தீவுக்கு வருகை தந்த அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா அவர்களினால் முல்லை மண்ணிலேயே வைத்து குறித்த சாதனைப் பெண் கௌரவிக்கப்பட்டுள்ளார். வெற்றிச் சான்றிதழ் வழங்கியதோடு  முன்னாள் மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ காதர் மஸ்தான் அவர்களை மாணவியின் வீட்டுக்கு அனுப்பி ஒரு தொகை பணம் அன்பளிப்பாக வழங்கியதுடன் மாணவிக்கு புலமைப்பரிசில் நிதியையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளார்.
முல்லையின் புலமைச் சாதனை நாயகி ஜனாதிபதியினால் கௌரவிப்பு........!!!!! முல்லையின் புலமைச் சாதனை நாயகி ஜனாதிபதியினால் கௌரவிப்பு........!!!!! Reviewed by Mankulam News on 6/10/2019 11:09:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.