Seo Services
Results for உயிரிழை

மாங்குளம் உயிரிழையில் உணவகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது......!!!

8/20/2019 04:13:00 pm

உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர் அமைப்பின் பயனாளிகளின் நிரந்தர நிதியீட்டத்துக்கான நிரந்தர வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் முகமாக நவீன முறையிலான உணவகம் ஒன்றினை அமைத்து அதனூடாக கிடைக்கப்பெறும் வருமானத்தின் மூலம் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் புதிய உணவகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (2019-08-19)  காலை 10.00 மணியளவில் உயிரிழை அமைப்பின் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள புதிய இடத்தில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

குறித்த உணவகம் அமைப்பதற்கு அன்னைமடி அமைப்பு ஒழுங்குபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுக்காக உயிரிழை அமைப்பின் பயனாளிகளுடன் கனடாவில் இருந்து வருகை தந்த திரு.இராசையா சிவகுமாரன், திரு.பாலசந்திரன் நித்தியானந்தம் திருமதி.செந்தூரி சிவகுருநாதன் திரு.S புவனேந்திரராஜா ஆகியோர் மற்றும் சமூக ஆர்வலர் திரு.ஈழவாணன் மற்றும் உயிரிழை அமைப்பின் அலுவலகர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.





மாங்குளம் உயிரிழையில் உணவகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது......!!! மாங்குளம் உயிரிழையில் உணவகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது......!!! Reviewed by Mankulam News on 8/20/2019 04:13:00 pm Rating: 5

மாங்குளம் உயிரிழை அமைப்பிற்கு வைத்தியர்கள் குழாம் இன்று விஜயம்.......!!!

7/24/2019 05:26:00 pm

இன்று (2019-07-24) உயிரிழை அமைப்பின் அலுவலகத்திற்கு Dr.சத்தியரூபன் (திட்டமிடல் வைத்திய அதிகாரி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முல்லைத்தீவு) அவர்களுடன் Dr.P.சஞ்ஜீபன் VP மற்றும் மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி Dr.மதுஷங்க மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் உயிரிழை பராமரிப்பு இல்லத்திற்கு சென்று அங்கு உள்ளவர்களை சந்தித்து பராமரிப்பு இல்ல பயனாளிகளின் மருத்துவ தேவைகள் தொடர்பாகவும் ஏனைய நோய்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியதோடு பராமரிப்பு இல்ல பயனாளிகளின் அழுத்தப் புண்களையும் பார்வையிட்டு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர்.
மாங்குளம் உயிரிழை அமைப்பிற்கு வைத்தியர்கள் குழாம் இன்று விஜயம்.......!!! மாங்குளம் உயிரிழை அமைப்பிற்கு வைத்தியர்கள் குழாம் இன்று விஜயம்.......!!! Reviewed by Mankulam News on 7/24/2019 05:26:00 pm Rating: 5

உயிரிழை அமைப்பின் ஜூன் மாதத்திற்கான மாதாந்த நிர்வாக குழு கூட்டம்.......!!!

6/29/2019 09:36:00 pm

மாங்குளம் உயிரிழை அமைப்பின் மாதாந்த நிர்வாக குழு கூட்டம் இன்று (2019-06-29) உயிரிழை அமைப்பின் அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.

வழமைபோன்று ஒவ்வொரு மாதத்தின் வருகின்ற கடைசி சனிக்கிழமையன்று இக் கூட்டம் நடைபெறுவதுன்டு  அதற்கமைய இன்றும் (29.06.2019) அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில்
1.தலைமை உரை
2.செயலாளர் அறிக்கை
3.கணக்கு அறிக்கை
4.அலுவல அறிக்கை
5.கல்வி செயற்திட்ட அறிக்கை
6.மருத்துவ அறிக்கை
7.விற்பனை நிலைய அறிக்கை
8.நிர்வாக உறுப்பினர்களின் மாதாந்த செயற்பாட்டறிக்கை

போன்ற அறிக்கைகள் வாசிக்கப்பட்டன

பின்னர் மேற்படி வாசிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.

பின்னர் மாவட்ட இணைப்பாளர்கள் தங்களது மாவட்ட பயனாளிகள் தேவைகள் தொடர்பாகவும் கதைத்தனர். அந்த விடயங்கள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கைக்காக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் இக் கூட்டம் மதிய நேர உணவுக்கு பின்னர் நிறைவு பெற்றது.
உயிரிழை அமைப்பின் ஜூன் மாதத்திற்கான மாதாந்த நிர்வாக குழு கூட்டம்.......!!! உயிரிழை அமைப்பின் ஜூன் மாதத்திற்கான மாதாந்த நிர்வாக குழு கூட்டம்.......!!! Reviewed by Mankulam News on 6/29/2019 09:36:00 pm Rating: 5

உயிரிழை பயனாளிகள் 34 பேருக்கு சிவன் அறக்கட்டளையால் மெத்தைகள் வழங்கிவைப்பு.....!!!

6/21/2019 02:10:00 pm

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் அமையப்பெற்றுள்ள உயிரிழை அமைப்பில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவர்களை சிவன் அறக்கட்டளை ஸ்தாபகரும் மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய திரு.கணேஸ்வரன் வேலாயுதம் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறார்.

அதன் அடிப்படையில் ஒரு பகுதியினருக்கான தண்ணீர் மெத்தைகள் ஏற்கனவே வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது 34 பயனாளிகளுக்கான மெத்தைகள் வழங்கியுதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கான மெத்தைகள் கனடா சிவன் அறக்கட்டளை நிதி அணுசரணையில் கனடா சிவன் அறக்கட்டளை உறுப்பினர்களான திரு.சக்தி, திரு.ச.கிருபாகரன் அவர்களும் சிவன் அறக்கட்டளை ஸ்தாபகர் திரு.கணேஸ்வரன் வேலாயுதம் அவர்களும் வழங்கி வைத்துள்ளார்.
உயிரிழை பயனாளிகள் 34 பேருக்கு சிவன் அறக்கட்டளையால் மெத்தைகள் வழங்கிவைப்பு.....!!! உயிரிழை பயனாளிகள் 34 பேருக்கு சிவன் அறக்கட்டளையால் மெத்தைகள் வழங்கிவைப்பு.....!!! Reviewed by Mankulam News on 6/21/2019 02:10:00 pm Rating: 5

உயிரிழை அமைப்பின் பயனாளிகளின் – விற்பனை நிலையம் திறப்பு!!

6/14/2019 03:05:00 pm



முல்லைத்தீவு மாங்குளம் உயிரிழை அமைப்பின் பயனாளிகளின் உற்பத்திப் பொருள்களின் வியாபார நிலையம் இன்று திறக்கப்பட்டது.
உயிரிழை அமைப்பின் போசகர் சிவதாஸ், வரோட் வலுவூட்டல் மையத்தின் நிறைவேற்று இயக்குனர் அருட்தந்தை ரொனால்ட் சுஜீவன் மற்றும் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், பயனாளிகள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.
உயிரிழை அமைப்பின் பயனாளிகளின் – விற்பனை நிலையம் திறப்பு!! உயிரிழை அமைப்பின் பயனாளிகளின் – விற்பனை நிலையம் திறப்பு!! Reviewed by Mankulam News on 6/14/2019 03:05:00 pm Rating: 5

வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் மூலம் உதவி வழங்கல்.........!!!!

6/12/2019 03:12:00 pm

கொழும்பைச் சேர்ந்த அமரர் பிரபாகரன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருமதி. பிரபாகரன்  அவர்கள் வழங்கிய நிதி அன்பளிப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் அமைந்துள்ள முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழை அமைப்பில் கடந்த கால யுத்த நிலைமைகளின் போது பாதிக்கப்பட்டு வீடுகளிலும் உறவினாராலும் பாரமரிக்க முடியாத முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கான இல்லத்தில் வாழ்ந்து வரும் பயனாளிகளின் உணவுத் தேவையினை பூர்த்தி செய்துகொள்ளும் முகமாக ரூபா 15000 பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான தீர்வுகோரி முல்லைத்தீவில் நடைபெற்று வரும் தொடர்ச்சியான சத்வீக போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நேற்றைய தினம் ரூபா 10000 பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.




வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் மூலம் உதவி வழங்கல்.........!!!! வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் மூலம் உதவி வழங்கல்.........!!!! Reviewed by Mankulam News on 6/12/2019 03:12:00 pm Rating: 5

மாங்குளத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு நிலையம் திறப்பு...........!!!!!!

5/28/2019 03:54:00 pm

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு நிலையம் உயிரிழை என அழைக்கப்படும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு நிலையம் மிகச் சிறந்த பாராட்டுதலுக்குரிய முயற்சியாக கடந்த 12-05-2019 மாங்குளத்தில் IMHO USA (International Medical Health Organization, USA) உதவியுடன் புதிதாகக் கட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.
வன்னியில் போரால் பதிக்கப்பட்டு முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோரை பராமரிக்கவென இந்த பராமரிப்பு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை IBC நிறுவனத்தின் தலைவர் திரு .கந்தையா பாஸ்கரன் அவர்கள் அமைத்து வழங்கியுள்ளார் பெருமளவு நிதி செலவில் பல மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட முயற்ச்சிகளின் பயனாக இந்த இல்லம் அமையப்பெற்றுள்ளது.

மாங்குளம் உயிரிழை அமைப்போடு இணைத்து இந்த பராமரிப்பு நிலையத்தை அமைத்துள்ளனர் .

சமூகத்தோடு இணைந்த வாழ்வியலை முன்னெடுக்க இந்த முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர்களாலும் ஓரளவு முயல முடியும் என்பதை இந்த இல்லம் மூலம்  செயற்ப்படுத்த முடியும் என்று நம்புவோம் .
இப்பதிவில் இணைக்கப்பட்ட படங்கள் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் வலம் வரும் ஆண், பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அவர்களுக்கான இந்தப் பராமரிப்பு நிலையம் மிக அவசியமானதொன்றாக அக்கறையுடன் நிறுவப்பட்டது.































மாங்குளத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு நிலையம் திறப்பு...........!!!!!! மாங்குளத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு நிலையம் திறப்பு...........!!!!!! Reviewed by Mankulam News on 5/28/2019 03:54:00 pm Rating: 5
ads 728x90 B
Powered by Blogger.