வவுனியாவைச் சேர்ந்த திருமதி தங்கரத்தினம் பாலச்சந்திரன் அவர்களின் 75வது பிறந்த நாளான நேற்று (2019-06-11) அவரது மகன் பாலச்சந்திரன் சுதா அவர்கள் வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் வழங்கிய நிதி அன்பளிப்பின் மூலம் மாங்குளத்தில் இரு பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பெரிய புளியங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் புலுமச்சிநாதகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர்களினால் கடந்த கால யுத்த நிலைமைகளினால் தாய் தந்தை இழந்த மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளினை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான கற்றல் உபகரணங்களை தந்துதவுமாறு வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த விண்ணப்பத்திற்கு அமைவாக இன்றைய தினம் புலுமச்சிநாதகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் ரூபா 25000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் புலுமச்சிநாதகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 15 பேருக்கும் பெரிய புளியங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
மாங்குளத்தில் இரு பாடசாலை மாணவர்கள் 25 பேருக்கு கற்றல் உபகரணங்கள்.......!!!
Reviewed by Mankulam News
on
6/12/2019 06:16:00 pm
Rating:

No comments: