புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தை புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் கொண்டு வருவதற்காக பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசனால் கொண்டுரப்பட்ட தீர்மானம் 18 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 06 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது.
புதுக்குடியிருப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்ட மக்களை புதைத்த இடம் சுனாதி நினைவாலயமாக பிரகடனம் செய்யப்பட்டு பேணப்பட்டு வருகின்றது. இந்த இடத்தைப் பிரதேச சபை தனது ஆளுகைக்குள் கொண்டுவந்து புனித பகுதியாக பேணி பாதுகாக்க வேண்டும் என்ற பிரரேரணையை புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி.சிவநேசன் சபையில் முன்வைத்தார்.
இதன்போது 18 உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இரண்டுபேர் நடுநிலையினை பேணினர். அதனையடுத்து அதிகளாவனர்களின் ஆதரவுடன் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது
சுனாமி நினைவாலயத்தை -பிரதேச சபைக்குக் கீழ் கொண்டு வரத் தீர்மானம்!!
Reviewed by Mankulam News
on
6/14/2019 03:01:00 pm
Rating:

No comments: