Seo Services
Results for கல்வி

மாங்குளத்தில் இரு பாடசாலை மாணவர்கள் 25 பேருக்கு கற்றல் உபகரணங்கள்.......!!!

6/12/2019 06:16:00 pm

வவுனியாவைச் சேர்ந்த திருமதி தங்கரத்தினம் பாலச்சந்திரன் அவர்களின் 75வது பிறந்த நாளான நேற்று (2019-06-11) அவரது மகன் பாலச்சந்திரன் சுதா அவர்கள் வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் வழங்கிய நிதி அன்பளிப்பின் மூலம் மாங்குளத்தில் இரு பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பெரிய புளியங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் புலுமச்சிநாதகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர்களினால் கடந்த கால யுத்த நிலைமைகளினால் தாய் தந்தை இழந்த மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளினை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான கற்றல் உபகரணங்களை தந்துதவுமாறு வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த விண்ணப்பத்திற்கு அமைவாக இன்றைய  தினம் புலுமச்சிநாதகுளம் அரசினர் தமிழ் கலவன்  பாடசாலை அதிபர் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில்  ரூபா 25000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் புலுமச்சிநாதகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 15 பேருக்கும் பெரிய புளியங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. 
மாங்குளத்தில் இரு பாடசாலை மாணவர்கள் 25 பேருக்கு கற்றல் உபகரணங்கள்.......!!! மாங்குளத்தில் இரு பாடசாலை மாணவர்கள் 25 பேருக்கு கற்றல் உபகரணங்கள்.......!!! Reviewed by Mankulam News on 6/12/2019 06:16:00 pm Rating: 5

திறன் வகுப்பறை திறந்துவைப்பு - முல்லை மாங்குளம் சண்முகரட்ணம் வித்தியாலயம்...

6/01/2019 03:33:00 pm

மாங்குளம் சண்முகரட்ணம் வித்தியாலயத்தில் முதன் முறையாக திறன் வகுப்பறை திறந்துவைப்பு.

சுண்ணாகம் றொட்றி கழகத்தின் ஒழுங்குபடுத்துதலின் கீழ் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கெளரவ திரு.செ.பிறேமகாந் அவர்களின் ஊடாக மாங்குளம் சண்முகரட்ணம் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை நேற்று வெள்ளிக்கிழமை 31-05-2019 அன்று மாணவர்களின் பாவனைக்காக வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்விலே பிரதம விருந்தினராக கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.த.பங்கையச்செல்வன் அவர்களும் கெளரவ விருந்தினராக சுண்ணாகம் றொட்றி கழகத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான திருவாதவூரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் திரு.செ.பிறேமகாந் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந் நிகழ்வில் மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்களும் கலந்துகொண்டனர்.

இதுபோன்ற மேலதிக வகுப்பறைகளுக்கான உதவிகளும் தேவைப்படுகின்றது ஆர்வமுடையோர் தொடர்புகொள்ளவும். 

0776390709 செ.பிறேமகாந்.













திறன் வகுப்பறை திறந்துவைப்பு - முல்லை மாங்குளம் சண்முகரட்ணம் வித்தியாலயம்... திறன் வகுப்பறை திறந்துவைப்பு - முல்லை மாங்குளம் சண்முகரட்ணம் வித்தியாலயம்... Reviewed by Mankulam News on 6/01/2019 03:33:00 pm Rating: 5

கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட கோரிக்கை.........!!!!!

5/25/2019 10:29:00 pm

பாடசாலைகள் மூடப்பட்ட காலப்பகுதியினுள் விடுபட்ட பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு, கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.
இதன்படி, எக்காரணத்திற்காகவும், தவணை பரீட்சையை கைவிட வேண்டாம் என, அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.ரத்நாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த மாதம் 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலை தொடர்ந்து பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் கடந்த ஏப்ரல் 22ம் திகதி தொடங்கப்படவிருந்த போதும், பாதுகாப்பு நிலைமைகளை கவனத்திற்கொண்டு மே 6ம் திகதியே பாடசாலைகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையிலேயே, பாடசாலைகளில் விடுபட்ட பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அதிபர்களுக்கு, கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட கோரிக்கை.........!!!!! கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட கோரிக்கை.........!!!!! Reviewed by Mankulam News on 5/25/2019 10:29:00 pm Rating: 5
ads 728x90 B
Powered by Blogger.