தேசிய ரீதியில் இடம்பெற்ற பெண்களுக்கான ஈருருளி போட்டியில் முல்லைத்தீவைச் சேர்ந்த யுவதி ஒருவர் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற 45 ஆவது தேசிய ரீதியிலான பெண்களுக்கான ஈருருளி ஓட்டப்போட்டியில் வடக்கு மாகாணத்துக்கு வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
கடந்த 23ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ மீட்டர் ஓட்டப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி நந்தீஸ்வரன் ராதிகா வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.
கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பத்தாம் இடத்தைப் பெற்ற குறித்த யுவதி இம் முறை வெள்ளிப் பதக்கத்தை பெற்றமை முல்லைத்தீவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதோடு பலரும் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த இந்திரஜித் – தமிழரசி தேசிய போட்டியில் முதன் முறையாக பங்குபற்றி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு யுவதியின் சாதனை.......!!!!!
Reviewed by Mankulam News
on
5/26/2019 07:05:00 pm
Rating:

No comments: