ஒவ்வொரு வருடமும் மே 08 ம் திகதி செஞ்சிலுவை செம்பிறை தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகின்றது. 156 ஆவது உலக செஞ்சிலுவை செம்பிறை தின தேசியரீதியிலான நிகழ்வு நேற்று 24-05-2019 வெள்ளிகிழமை முல்லைத்தீவு மாவட்ட செஞ்சிலுவை கிளையில் சிறப்புற இடம்பெற்றது. மனிதாபிமானம் மற்றும் இயற்கையை நேசிப்போம் என்ற கருப்பொருளில் இவ்வருடம் இந்நிகழ்வு கொண்டாடப்படுகின்றது.
இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கௌரவ தலைவர் திரு.ஜெகத் அபேசிங்க, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன், பணிப்பாளர் நாயகம் இலங்கை செஞ்சிலுவை சங்கம் வைத்திய கலாநிதி மகேஸ் குணசேகர, சர்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதி திரு.மார்க் சோபா
தலைவர் மனிதாபிமான விழுமியங்கள் இலங்கை செஞ்சிலுவை சங்கம் திரு. அன்ரன் விக்டோரியா, தலைவர் இலங்கை செஞ்சிலுவை சங்கம் முல்லைத்தீவு கிளை திரு.சு.மரியநாயகம் மற்றும் செஞ்சிலுவை சங்க தொண்டர்கள், ஆளுநர்குழு உறுப்பினர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தேசிய கொடி மற்றும் செஞ்சிலுவை கொடி ஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வு இவ் தேசிய நிகழ்வு முல்லைத்தீவில் கொண்டாட பட்டமைக்கான நினைவு சின்னம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கௌரவ தலைவர் திரு.ஜெகத் அபேசிங்க அவர்களால் திரைநீக்கம் செய்யப்பட்டு திறந்த வைக்கப்பட்டது.
தொடர்ந்து இழந்த எமது உலகத்தை புதுபிப்போம் என்கின்ற உறுதியுடன் மரக்கன்றுகள் நாட்டும் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றுது.
தொடர்ந்து பத்மபிரியா கலாசாலை மாணவிகளின் வரவேற்பு நடனம் மற்றும் பிரதம அதிதிகளின் உரையுடன் 11 மணியளவில் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
முல்லைத்தீவில் இடம்பெற்ற உலக செஞ்சிலுவை-செம்பிறை தினம்...........!!!!!!
Reviewed by Mankulam News
on
5/26/2019 01:41:00 pm
Rating:

No comments: