முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக 12 ஆயிரத்தி 766 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல விவசாய செய்கைகள் அழிவடைந்துள்ளன. குடிநீருக்கான தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆயிரத்தி 967 குடும்பங்களை சேர்ந்த 6 ஆயிரத்தி 296 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 10 ஆயிரத்தி 799 குடும்பங்களை சேர்ந்த 33 ஆயிரத்தி 797 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பிரதேசங்களில் தேசிய அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தினரால் குடிநீர் தட்டுப்பாடான இடங்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளபடுவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவில் வறட்சியால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு......!!!
Reviewed by Mankulam News
on
5/27/2019 02:48:00 pm
Rating:

No comments: