Seo Services

முல்லைத்தீவில் தீ பரவல்......!!!!


முல்லைத்தீவு, செல்வபுரம் பகுதியில் நேற்று (13) மக்கள் குடியிருப்புக்கு அண்மையில் பனங்கூடலில் ஏற்பட்ட தீ பரவியதில் அதிகளவான பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. 

இந்த தீ பரவலின் போது மக்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் சிலவும் எரிந்து சேதமடைந்துள்ளன. 

செல்வபுரம் மக்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள பனங்கூடலுக்குள் திடீரென பற்றிய தீ பனங்கூடல் முழுதும் பரவியுள்ளது. 

இந்நிலையில் இந்த தீவிபத்து தொடர்பில் அருகில் உள்ள மக்கள் பொலிஸார் மற்றும் படையினருக்கு தெரியப்படுத்தியுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர் மற்றம் பொலிஸார் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஊழியர்கள் மற்றம் மாவட்ட செயலக ஊழியர்கள் ஆகியோர் இணைந்து தீயினை தண்ணீர் பாச்சி அணைத்துள்ளதுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக பனை மரக் கூடல்கள் அடிக்கடி தீபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


முல்லைத்தீவில் தீ பரவல்......!!!! முல்லைத்தீவில் தீ பரவல்......!!!! Reviewed by Mankulam News on 6/14/2019 05:15:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.