மாங்குளம் சண்முகரட்ணம் வித்தியாலயத்தில் முதன் முறையாக திறன் வகுப்பறை திறந்துவைப்பு.
சுண்ணாகம் றொட்றி கழகத்தின் ஒழுங்குபடுத்துதலின் கீழ் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கெளரவ திரு.செ.பிறேமகாந் அவர்களின் ஊடாக மாங்குளம் சண்முகரட்ணம் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை நேற்று வெள்ளிக்கிழமை 31-05-2019 அன்று மாணவர்களின் பாவனைக்காக வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்விலே பிரதம விருந்தினராக கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.த.பங்கையச்செல்வன் அவர்களும் கெளரவ விருந்தினராக சுண்ணாகம் றொட்றி கழகத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான திருவாதவூரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் திரு.செ.பிறேமகாந் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந் நிகழ்வில் மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்களும் கலந்துகொண்டனர்.

இதுபோன்ற மேலதிக வகுப்பறைகளுக்கான உதவிகளும் தேவைப்படுகின்றது ஆர்வமுடையோர் தொடர்புகொள்ளவும்.
0776390709 செ.பிறேமகாந்.
திறன் வகுப்பறை திறந்துவைப்பு - முல்லை மாங்குளம் சண்முகரட்ணம் வித்தியாலயம்...
Reviewed by Mankulam News
on
6/01/2019 03:33:00 pm
Rating:

No comments: