இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், வேலை மற்றும் பாடசாலைக்கு செல்வதற்காக புகையிரதங்களில் பயணம் செய்யும் மக்கள் சிக்கலை எதிர்கொள்வார்கள் என சமூகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன், புகையிரத நிர்வாக பிரச்சினையை முன்னிறுத்தியே இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தாதியர்கள் முன்னெடுத்துவரும் சுகயீன விடுமுறை போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்ந்து வரும் நிலையில், வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
..{ந}…
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பொதுமக்கள் எதிர்நோக்கப் போகும் புதிய சிக்கல்….!
Reviewed by Mankulam News
on
3/27/2019 07:41:00 pm
Rating:
No comments: