வடக்கில் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் தொண்டராசிரியர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி….! விரைவில் அரச நியமனம்…!!
வடக்கில் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் தொண்டராசிரியர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி….! விரைவில் அரச நியமனம்…!!
வடக்கு மாகாணத்தில் 491தொண்டர் ஆசிரியர்களை அரச நியமனத்துக் குள் உள்வாங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம், மீள்குடியமர்வு மற்றும் மறுவாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள்அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலர் வே.சிவஞானசோதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் உள்ளதாவது;
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம், மீள்குடியமர்வு; மற்றும் மறுவாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளையோர் விவகாரங்கள் அமைச்சர் என்ற முறையில் அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்திருந்தார். அதில் 491 பேரை தொண்டர் ஆசிரியர்களாக இலங்கை ஆசிரியர் சேவை வகுப்பு 3 தரம் 11க்கு உள்வாங்குவதற்கான அமைச்சரவை அனுமதியைக் கோரியிருந்தார்.
இதன் கீழ் கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தும் கா.பொ.த உயர்தரத்தைப் பூர்த்தி செய்தும், 3 வருடங்கள் தொடர்ச்சியாகச் சேவையாற்றி இருப்பின் ஆசிரியர்சேவை வகுப்பு 3 தரம் 11க்கு நியமிக்க அனுமதி வழங்கப்பட்டது.
30 வருடங்கள் போர் காரணமாக இவர்களை உள்வாங்கும்போது வயது எல்லை 50 க்கு மேற்படாமலும், 3 வருடங்கள் தொடர்ச்சியாக சேவையாற்றும் பொழுது, அதில் நலன்புரி நிலையங்களிலும் இருந்த காலப்பகுதிகள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும் எனவும், 55வீதமான வரவைப் பூர்த்தி செய்திருக்க வேண்டுமென்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நிபந்தனைகள் பொருந்தும் பட்சத்தில் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்குமுன் 2017 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தில் 639 தொண்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், மேலும் 491 பேரை உள்வாங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பது வடக்கு மாகாண அபிவிருத்தியில் இளையோருக்கு அரசதுறை வேலைவாய்ப்பை வழங்குவதற்கான வாய்ப்பாக அமைகிறது. இவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு தரமான ஆசிரியர்களாக மாற்றப்படுவர் என்றுள்ளது.
வடக்கில் நியமனம் வழங்கப்படாத மேற்குறித்த தொண்டர் ஆசிரியர்கள், விரைவில் நியமனம் வழங்குமாறு பல தடவைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
வடக்கில் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் தொண்டராசிரியர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி….! விரைவில் அரச நியமனம்…!!
Reviewed by Mankulam News
on
3/27/2019 08:57:00 pm
Rating:
No comments: