Seo Services

முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் சிறார்களுக்கு உதவிகளை வழங்கிவைத்தார் - சி.வி.விக்னேஸ்வரன்!


முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட முன்னால் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மாங்குளம் மற்றும் கேப்பாபுலவு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு மாணவர்களுக்கு உதவிகளை வழங்கிவைத்துள்ளதுடன் கேப்பாபுலவு மக்களுக்கும் உதவிகளை வழங்கிவைத்துள்ளார்.

மாங்குளம் பிரதேசத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்கு உட்பட்ட மு /சண்முகரட்ணம் வித்தியாலயம், மு/ஒலுமடு அ. த. க பாடசாலை, மு/கறிப்பட்டமுறிப்பு அ. த. க பாடசாலை, மு/பெரியபுளியங்குளம் அ. த. க பாடசாலைகளில் கல்வி கற்கின்ற 150 இற்க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இன்று காலை மாங்குளம் மாவடி சித்தி விநாயகர் ஆலயத்தில் வைத்து ஏறத்தாழ  ரூபாய் 3 இலட்சம்  பெறுமதியுள்ள கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் வட மாகாணசபையின் முன்னால் முதலமைச்சர் சி. வி.விக்கினேஸ்வரன் மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமீனன், தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் அருந்தவபாலன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ரெஜி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தனர்.

மாங்குளத்தில் 130 பாடசாலை சிறுவர்களுக்கும் முள்ளியவளை பிரதேசத்தினை சேர்ந்த 93 பாடசாலை சிறுவர்களுக்கு கேப்பாபுலவு பகுதியில் வைத்தும் பாடசாலை கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்துள்ளார்.

இதேவேளை கேப்பாபுலவில் 709 ஆவது நாளாக தொடர் போராட்டம் நடத்தும் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக உலர் உணவு பொருட்களையும் இன்று (09.02.2019) வழங்கிவைத்துள்ளார்.

கேப்பாபுலவில் போராட்ட மக்களை சந்தித்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுட்ட மக்கள் தொடர்பில் மக்கள் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.


முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் சிறார்களுக்கு உதவிகளை வழங்கிவைத்தார் - சி.வி.விக்னேஸ்வரன்! முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் சிறார்களுக்கு உதவிகளை வழங்கிவைத்தார் - சி.வி.விக்னேஸ்வரன்! Reviewed by Mankulam News on 2/09/2019 08:22:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.