மாங்குளம் ஒலுமடுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நேற்று (2019/02/07) அதிகாலை வேளையில் உட்புகுந்த 12 அடி நீள முதலையினால் வீட்டார் பெரும் அச்சமடைந்ததோடு பொலிசாருக்கு தகவல் வழங்கியதனையடுத்து முதலை மடக்கிப் பிடிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம் - ஒட்டுசுட்டான் வீதியில் உள்ள ஒலுமடுக் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் நேற்று (07/02/2019) அதிகாலைவேளையில் 12 அடி முதலை உட்புகுந்துள்ளது. இதன்போது அயலில் உள்ள சில நாய்கள் குரைத்துள்ளன இருப்பினும் ஏதும் அவதானிக்கப்படவில்லை. அந்த நேரம் வீட்டில் 3 சிறுவர்கள் உட்பட ஐவர் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் காலையில் வழமைபோன்று வீட்டார் எழுந்து தமது பணிகளில் ஈடுபட்டு சிறுவர்களும் பாடசாலை சென்ற நிலையில் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த காரின் கீழே ஓர் பெரிய உருவம் தெரிவதனை அவதானித்த வீட்டார் அதனை முதலை என இனம் கண்டுகொண்டனர். அதன் அளவை அவதானித்து அச்சமடைந்த நிலையில் உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து இரு பகுதியினரும் இணைந்து குறித்த வீட்டிற்குச் சென்று நேற்று பகல் வேளையில் குறித்த முதலையை உயிரோடு மடக்கிப் பிடித்துச் சென்றனர். இதனால் அப் பகுதியில் சிறு பதற்றம் நிலவியது.
மாங்குளம் - ஒலுமடுப் பகுதியில் பிடிபட்ட 12 அடி நீள முதலை!!
Reviewed by Mankulam News
on
2/08/2019 08:33:00 pm
Rating:
No comments: