எரிபொருட்களின் விலை நேற்று (2019/02/11) நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுற்றுமாற்று வேலை நடைபெற்றதையடுத்து பொலிசார் தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புதிய விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் 92 ஒக்ரின் பெற்றோலின் விலை 6 ரூபாயாலும் 95 ஒக்ரின் பெற்றோலின் விலை 5 ரூபாயாலும், ஓட்டோ டீசல் விலை 4 மற்றும் சுப்பர் டீசல்விலை 8 ரூபாயாலும் நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்தது. புதிய விலையின் படி பெற்றோல்- (92) - 129 ரூபா, (95)- 152 ரூபா , ஓட்டோடீசல் 99 ரூபா , சுப்பர் டீசல்126 ரூபா அறிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மாங்குளத்தில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (2019/02/11) இரவு 10.50 மணிக்கே எரிபொருளின் விலையை மாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் அடிக்க சென்ற நபர் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு கடமையில் இருந்தவரிடம் வினவிய போது உயர் அதிகாரிகளின் பணிப்பிலேயே விலையை மாற்றியதாக தெரிவித்தார்.
உடனடியாக குறித்த நபர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு பதிவு செய்தார். அதனடிப்படையில் பொலிசார் சம்பவ இடத்துக்கு வருகைதந்து உடனடியாக பழைய விலைகளுக்கு மாற்றுவித்ததோடு பாதிக்கப்பட்ட நபருக்குரிய மீதி தொகையையும் பெற்றுக்கொடுத்தனர்.
எரிபொருட்கள் அடிக்கடி தீர்ந்துபோய் எரிபொருளுக்காக மக்களை அலையவிடும் மாங்குளத்தில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தில்லாலங்கடி மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Copy on :- IBC தமிழ்
மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று நடந்த தில்லாலங்கடி!
Reviewed by Mankulam News
on
2/12/2019 07:40:00 pm
Rating:
No comments: