மாங்குளம் A9 வீதியில் அமைந்துள்ள உயிரிழை அமைப்பிற்கு சிவன் அறக்கட்டளை ஸ்தாபகர் திரு.கணேஸ்வரன் வேலாயுதம் மற்றும் சிவநாதன் ஆகியோர் சென்று அமைப்பிலுள்ளவர்களை பார்வையிட்டுள்ளார்கள்.
அவர்களின் செயற்பாடுகள் பற்றி பார்வையிட்டதுடன் மாதாந்த பத்திரிகை கொள்வனவிற்கான கொடுப்பனவு தொகையினையும் வழங்கி வைத்துள்ளார்.
மேலும் அவர்களின் சுயதொழில் முயற்சியாக குறைந்த விலையில் தேயிலையினை கொள்வனவு செய்து அவற்றை பொதிசெய்து விற்பனை செய்யவும் பலாக்காய் பொரியல் செய்து பொதிசெய்து விற்பனை செய்வதற்கான முயற்சியினையும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மாங்குளம் உயிரிழை அமைப்பின் பயனாளிகளுக்கு சிவன் அறக்கட்டளையால் உதவி!!
Reviewed by Mankulam News
on
2/13/2019 05:04:00 pm
Rating:
No comments: