தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று நடத்தும் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்துக்கு பிரதேச சபைத் தவிசாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
இது தொடர்பில் ஊடக சந்திப்புக்கு பிரதேச சபைத் தவிசாளர்கள் அழைப்புவிடுத்ததும், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தால் அவசர அவசரமாக தவிசாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
வடக்குக்கு மூன்று நாள் பயணமாக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க வந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று மீளாய்வுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அழைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பிரதிநிதிகளான பிரதேச சபைத் தவிசாளர்கள் அழைக்கப்படவில்லை.
இது தொடர்பில் புதுக்குடியிருப்புப் பிரதேச சபைத் தவிசாளர் செ.பிறேமகாந், மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தயாநந்தன் ஆகியோர் இணைந்து நேற்றுப் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர்.
அவர்கள் தெரிவித்தததாவது:
அவர்கள் தெரிவித்தததாவது:
மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் கூட்டத்துக்கு பிரதேச செயலர்களுக்கு மூன்று நாள்களுக்கு முன்னர் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. எங்களுக்கு ஊடக சந்திப்புக்கு அறிவிப்பு விடுத்த சில நிமிடங்களின் பின்னரே அழைப்புக் கிடைத்துள்ளது. அழைப்பு தவறுதலாக அனுப்பப்படவில்லை என்று சாக்குப் போக்குச் சொல்கின்றார்கள்.
பதவி ஒழுங்கு நிலை உள்ளது. அரச தலைவர், தலைமை அமைச்சர், ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், பிரதேச சபைத் தவிசாளர்கள் என்று மதிப்பளிக்கப்படவேண்டிய ஒழுங்கு உள்ளது.
ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களில் உள்ள அதிகாரிகள் பிரதேச சபைத் தவிசாளர்கள், சபை உறுப்பினர்களை மதிப்பதில்லை. மாற்றாந்தாய் போன்று நடத்துகின்றார்கள்.
மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆட்சி உருவாக்கப்பட்ட பின்னரும், பிரதேச சபைச் செயலர்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களைப் பார்த்தால், இங்கு அவ்வாறான ஆட்சி நடக்காததுபோன்றே உள்ளது. இது தொடர்பில் கொழும்பு அரசின் அமைச்;சுக்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம் – என்றார்கள்.
தவிசாளர்களுக்கு அவசரமாக அழைப்பு விடுத்த- முல்லைத்தீவு மாவட்டச் செயலகம்!!
Reviewed by Mankulam News
on
2/17/2019 04:35:00 pm
Rating:
No comments: