வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் இன்று ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வட கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் கவனவீர்ப்பு போராட்டத்துக்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கும் ஆதரவாக முல்லைத்தீவு மாவட்டம் முடங்கியுள்ளது .
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு உடையார்கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு முள்ளியவளை ஒட்டுசுட்டான் மாங்குளம் மல்லாவி போன்ற நகர்ப்பகுதிகள் எங்கும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவு வழங்கப்பட்டுள்ளதோடு தனியார் மற்றும் அரச பேரூந்துகளும் சேவையில்ஈடுபடவில்லை அதேவேளை பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைகளும் இயங்கவில்லை
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டமே வெறிச்சோடி காணப்படுவதோடு பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் கலந்துகொள்ள கிளிநொச்சி சென்றுள்ளதாக அறியமுடிகிறது .
போராட்டத்துக்கு ஆதரவாக முடங்கியது முல்லைத்தீவு!!
Reviewed by Mankulam News
on
2/25/2019 04:08:00 pm
Rating:
No comments: