Seo Services

மாங்குளம் - கொக்காவில் பகுதியில் விபத்து..! ஒருவர் பலி மூவர் படுகாயம்.....!!



கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து மாங்குளம் - கொக்காவில் பகுதியில் தரித்து நின்ற கனரக வாகனத்துடன் (டிப்பர்) மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம் பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 4.10 மணியளவில் இடம்பெற்ற மேற்படி விபத்து சம்பவம் தொடர்பில், தொடர் பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு, கொக்காவில் ஏ9 வீதியில் இன்று அதிகாலை 4:10 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றது என்று மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறையைச் சேர்ந்த செல்வராசா நகுலேஸ்வரன் என்பவரே உயிரந்தார். அவர் சாரதியுடன் உரையாடிக்கொண்டு இருந்த போதே விபத்து இடம்பெற்றது என்று விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

அதிசொகுசு பேருந்து சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என்றும் பொலிஸார் கூறினர். என படுகாயமடைந்த மூவரும் கிளிநாச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலமும் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.







Copy :- jaffna zone
மாங்குளம் - கொக்காவில் பகுதியில் விபத்து..! ஒருவர் பலி மூவர் படுகாயம்.....!! மாங்குளம் - கொக்காவில் பகுதியில் விபத்து..! ஒருவர் பலி மூவர் படுகாயம்.....!! Reviewed by Mankulam News on 2/26/2019 02:36:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.