முல்லைத்தீவு மாவட்டத்தின் உப நகரங்களில் ஒன்றான மாங்குளம் பகுதிக்கான பேருந்து நிலையம் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் உப நகரங்களான ஒட்டுசுட்டான் திருமுறிகண்டி மாங்குளம் ஆகிய பகுதிகளில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படாத நிலையில், குறித்த பகுதிகளுக்கு பல்வேறு தேவைகருதி வரும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
மேற்படி பகுதிகளில் பேருந்து நிலையங்களை அமைப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அதற்கான காணிகளை அடையாளப்படுத்துவதில் காலதாமதங்கள் காணப்பட்டன.
கடந்த ஆண்டு மாங்குளம் பகுதிக்கான பேருந்து நிலையத்திற்கான காணி அடையாளப்படுத்தப்பட்டு பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் பணிகள் நிறைவுறுத்தப்பட்டுள்ள நிலையில் மிக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
10 வருடங்களின் பின் மாங்குளம் பேரூந்து நிலையம்......!
Reviewed by Mankulam News
on
2/24/2019 04:03:00 pm
Rating:
No comments: