முல்லைத்தீவு மாவட்டத்தின் கொல்லவிலாங்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் கிருமி நாசினிகள் பயன்படுத்தாது நாற்று நடுகை மூலம் இயந்திரம் மூலம் நாற்று நடப்பட்டு செய்கை ப ண்ணப்பட்ட வயல் நிலத்தில் நெல் அறுவடை செய்யும் வயல் விழா கடந்த 6ஆம் திகதி (2019/02/06) மிகச்சிறப்புற இடம் பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொல்லவிலாங்குளம் விவசாய போதனாசிரியர் கி.கீர்த்திகன் தலைமையில் இடம்பெற்ற இந்த வயல் விழாவில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ந.றஞ்சனா , முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் உகநாதன் , முல்லைத்தீவு விவசாய திணைக்கள உதவிப்பணிப்பாளர் , மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளர் விவசாய போதனாசிரியர்கள் , விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கிருமி நாசினிகள் பயன்படுத்தாது நாற்று நடுகை மூலம் இயந்திரம் மூலம் நாற்று நடப்பட்டு செய்கைபண்ணப்படும் பொழுது கிடைக்கும் நன்மைகள் தொடர்பாக விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டதோடு தற்போது நாட்டில் அதிகரித்துள்ள படைப்புளுவின் தாக்கம் தொடர்பிலும் விவசாயிகளுக்கு தெளிவூட்டப்பட்டது.
இயற்கை விவசாயத்தில் சாதித்த முல்லைத்தீவு விவசாயிகள் - வயல் விழா கொண்டாடி பெருமிதம்!
Reviewed by Mankulam News
on
2/08/2019 07:17:00 am
Rating:
No comments: