Seo Services

பாடசாலைகளில் பெற்றோர்களிடம் பணம் பெற்றால் உடன் நடவடிக்கை - மாங்குளம் பாடசாலைகளில் சுவரொட்டி!!!!

பாடசாலைகளில் பெற்றோர்களிடம் பணம் பெற்றால் உடன் நடவடிக்கை - மாங்குளம் பாடசாலைகளில் சுவரொட்டி!!!!


பாடசாலை நடவடிக்கைகள் என்ற பெயரில் பெற்றோர்களிடம் பணம் சேகரிப்பதை நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கல்வி அமைச்சரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் செயற்பாடுகளுக்கு என தெரிவித்து, பணம் சேகரிப்பது தொடர்பில் அண்மையில் அமைச்சரிடம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த முறைபாடுகளுக்கு அமையவே குறித்த பணிப்புரையை அமைச்சர் விடுத்துள்ளார்.

நிதிசேகரிப்பு தொடர்பில் கல்வி அமைச்சின் சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒதுக்கீடுகளுக்கு அமைய அனைத்து அதிகாரிகளும் செயற்படவேண்டும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

**********************************************************************************************

மேலே படத்தில் காட்டப்பட்ட சுவரொட்டி மு/மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்திலும் மு/சண்முகரட்ணம் வித்தியாலயத்திலும் சமூக ஆர்வலர்களால் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஒட்டப்படிருந்த சுவரொட்டிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

**********************************************************************************************

சுவரொட்டியில் குறிப்பிடப்பட்ட தகவல் பின்வருமாறு.

"பாடசாலைகளில் பெற்றோர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்வதைத் தடுப்பதற்கு உடன் நடவடிக்கை மேற் கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். பெற்றோர்களிடம் இருந்து பாடசாலை நடவடிக்கைகளுக்காகப் பணம் சேகரிக்கப்படுகின்றதா என்பதைக் கண்டறிவ தற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கென அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான முறைப்பாடுகளை கே.ஜி.சி. மகேஷிக்கா, உதவி கல்விப் பணிப்பாளர் தேசிய பாடசாலைக் கிளை, கல்வியமைச்சு, இசுறுப்பாய, பத்தரமுல்ல என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.

பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளைக் கருத்திற் கொண்டு அண்மையில் இடம் பெற்ற அதிகாரிகளுடான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

பணம் சேகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஏற்பாடுகளுக்கு அமைய அனைத்து அதிகாரிகளும் செயற்பட வேண்டும்.

இலவசக் கல்வியின் நன்மைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் பெற்றோர்கள் மீது தேவையில்லாத அழுத்தங்களை கொடுக்கும் இவ்வாறான செயற்பாடுகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது."

**********************************************************************************************
விளம்பரம்.
இலவசமாக விளம்பரங்களை பிரசுரிக்க நாம் தயாராக உள்ளோம்.



பாடசாலைகளில் பெற்றோர்களிடம் பணம் பெற்றால் உடன் நடவடிக்கை - மாங்குளம் பாடசாலைகளில் சுவரொட்டி!!!! பாடசாலைகளில் பெற்றோர்களிடம் பணம் பெற்றால் உடன் நடவடிக்கை - மாங்குளம் பாடசாலைகளில் சுவரொட்டி!!!! Reviewed by Mankulam News on 1/28/2019 07:15:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.