புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஒலுமடு உப அலுவலக நூல்நிலைய சேவைகளை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் - தவிசாளர் தெரிவிப்பு
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட ஒலுமடு உபஅலுவலக பொது நூலகம் நீண்ட காலமாக இயங்காமல் இருந்து வந்தமையால் பாடசாலை மாணவர்கள் மற்றும் வாசகர்கள் நூல்நிலைய வசதியின்றி இருந்து வந்த நிலையில் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் முயற்சியால் கடந்த வருட வாசிப்பு மாதத்தின் போது ஒலுமடு பொது நூலகத்தை புணரமைத்து நூலக சேவைகளை மீள ஆரம்பித்து வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது அதனடிப்படையில் தற்போது பொது நூலகம் புணரமைக்கப்பட்டு பிரதேச சபையின் உப அலுவலக வளாகத்திலே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஒலுமடு உப அலுவலக நூல் நிலைய சேவைகளை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் - தவிசாளர் தெரிவிப்பு!
Reviewed by Mankulam News
on
1/14/2019 01:09:00 pm
Rating:
No comments: