ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய பகுதியை புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை தீர்மானம்!
கடந்த வியாழக்கிழமை (10/01/2019) காலை 9.30 மணியளவில் புதுக்குடியிருப்புப் பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது சபையில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயத்தைச் சுற்றி 500 மீற்றருக்கு உட்பட்ட பகுதியைப் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதுடன், அந்த பகுதிகளில் அசைவ உணவகங்களுக்கு அனுமதி வழங்குதில்லை என்றும் எதிர்காலத்தில் எங்கள் பிரதேசங்களை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்ற நோக்கோடு, இந்த தீர்மானம் புதுக்குடியிருப்புப் பிரதேச சபையின் இந்த ஆண்டுக்கான முதலாவது அமர்வின் போது நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய பகுதியை புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை தீர்மானம்!
Reviewed by Mankulam News
on
1/14/2019 07:20:00 am
Rating:
No comments: