புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்கு உட்பட்ட தையலகங்கள் மற்றும் சிகை அலங்கரிப்பு நிலைங்கள் தொடர்பான தீர்மானம்!
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2019 தை மாதத்துக்கான அமர்வு கடந்த வியாழக்கிழமை (10/01/2019) நடைபெற்றது!நடைபெற்றது! காலை 9.30 மணியளவில் புதுக்குடியிருப்புப் பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான தை மாத அமர்வு பிரதேச சபை தவிசாளர் திரு செ.பிறேமகாந் அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது சபையில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் தையல் நிலையங்கள் என்பன பாடசாலை மாணவர்களுக்குக் கல்வி அமைச்சால் பணிக்கப்பட்ட நியதிகளுக்கு அமைவாகத் சிகை அலங்கரிப்பதையும் ஆடைகள் தைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்கு உட்பட்ட தையலகங்கள் மற்றும் சிகை அலங்கரிப்பு நிலைங்கள் தொடர்பான தீர்மானம்!
Reviewed by Mankulam News
on
1/14/2019 07:06:00 am
Rating:
No comments: