திருமுறிகண்டி இந்து வித்யாலய 2019 ஆம் ஆண்டு்க்கான இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (2019/01/23) பாடசாலை முதல்வர் திரு. இ.பேரின்பநாதன் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது
பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச சபை கௌரவ தவிசாளர் திரு செ.பிறேமகாந் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் சிறப்பு விருந்தினராக துணுக்காய் உதவிக் கல்வி பணிப்பாளர் திருமதி. ஜெ.பாலச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் கௌரவ விருந்தினராக திரு. தியாகராசா அவர்கள் கலந்து கொண்டார். இவர் பாடசாலை முன் மதிலை கட்டி தருவதாக உறுதியளித்தார். மற்றும் ஓர் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்ட KMS Transport உரிமையாளர் திரு.ம.செல்வகுமார் அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் தன்னால் கலந்து கொள்ள முடியாது போய் விட்டது என்றும், பாடசாலை சுற்று வேலி அமைக்க ரூபாய் 50,000 தருவதாக தகவலளித்தார். மேலும் தவிசாளர் அவர்கள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவமோகன் அவர்களின் நிதியில் 1,000,000/= செலவில் பாடசாலை மைதானத்தை புனரமைத்து தருவதாக உறுதியளித்தார்.
மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் வெற்றி கிண்ணங்கள் அனைத்தையும் முறிகண்டி பிள்ளையார் கோவில். நிதியில் இருந்து இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்டது.
திருமுறிகண்டி இந்து வித்யாலய இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் இன்று !
Reviewed by Mankulam News
on
1/23/2019 09:07:00 pm
Rating:
No comments: