Seo Services

மாங்குளத்தில் மின்சாரம் தாக்கி குழந்தை பலி !

மாங்குளத்தில் மின்சாரம் தாக்கி குழந்தை பலி 



முல்லைத்தீவு, மாங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நட்டகண்டல் கிராமத்தில் மின்சாரம் தாக்கி மூன்று வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளது.

நேற்றுக் காலை மின்சார தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் மல்லாவி வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட தகவலுக்கு அமைய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த குழந்தை 3 வயதுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மாங்குளத்தில் மின்சாரம் தாக்கி குழந்தை பலி ! மாங்குளத்தில் மின்சாரம் தாக்கி குழந்தை பலி ! Reviewed by Mankulam News on 1/22/2019 02:07:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.