Seo Services

மு/ மாங்குளம் ம.ம.வி பழைய மாணவர்களின் 4 வது வருட பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது!



மு/ மாங்குளம் ம.ம.வி பழைய மாணவர்களின் நான்காவது வருட பொங்கல் விழா சிறப்பான முறையில் இன்று நடைபெற்றது.

மாங்குளம் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் 2019 ஆம் ஆண்டுக்கான "தமிழர் திருவிழா தைப்பொங்கல் பெருவிழா" இன்று பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியது. பாதசாலை நுழைவாயிலுக்கு அருகே சிறப்பான முறையில் கோலமிட்டு பொங்கல் பொங்கப்ட்டது. மேலும் சூரியப்படையல் நிகழ்ந்தது.

பின்பு கிளித்தட்டு, முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுக்களும் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

மாலை 4 மணியளவிலே கலை நிகள்வுகள், சிறப்பு பட்டிமன்றம் போன்றன இடம்பெற்றது.

இன்றைய தைத்திரு நன்நாளிலே மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்தில் 2007 ஆம் அண்டு க.பொ.த சாதாரண தர மணவர்களால் இந்த வருடம் அதாவது 2019 ல் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான கடந்த கால வினத்தாள்கள் அடங்கிய நூலினை மாணவர்களுக்கு வழங்கினார்கள்.

பாடசாலையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுக்களுக்கான காணொலியை எமது முகநூல் கணக்கில் நேரலையாக பதிவிட்டொம்.
அதற்கான மீயிணை (LINK) கீழே இணைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை தைப்பொங்கல் நேரலைகளை இங்கே கிளிக் செய்வதன் மூலம் எமது கணக்கில் பார்வையிடலாம்.

நேரலை







மு/ மாங்குளம் ம.ம.வி பழைய மாணவர்களின் 4 வது வருட பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது! மு/ மாங்குளம் ம.ம.வி பழைய மாணவர்களின் 4 வது வருட பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது! Reviewed by Mankulam News on 1/15/2019 08:49:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.