Seo Services

முல்/மாங்குளம் ம.ம.வி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று (30/01/2019) சிறப்புற நடைபெற்றது!!!



நாவலர் அணி சுமார் 150 புள்ளிகள் வித்தியாசத்தில் பாரிய வெற்றியை பதிவு செய்து கொண்டது.

முல்/மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்தினயடைய இல்லங்களுக்கு இடையிலான மெய்வல்லுநர் திறநாய்வு போட்டியானது இன்று வித்தியாலய மைதாலனத்தில் நடைபெற்றது.

மாங்குளம் நியூஸ் குழு உறுப்பினரால் பதிவு செய்யப்பட்ட காணோலிக் காட்சிகள் தொகுக்கப்பட்ட பின்னர் எமது youtube , facebook ஆகியவற்றில் பதிவிடவுள்ளோம்.
காணோலி பதிவுசெய்த உறுப்பினருக்கு நன்றிகள்.

இன்று புதன்கிழமை (2019/01/30) மதியம் 12 மணியளவில் ஆரம்பமானது.

விளையாட்டுப் போட்டி வித்தியாலய முதல்வர் திரு.த.யோகானந்தராசா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்விலே பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ வைத்தியக்கலானிதி சி.சிவமோகன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக Dr.H.N.மதுசங்க (வைத்தியப் பொறுப்பதிகாரி - ஆதார வைத்தியசாலை - மாங்குளம்) அவர்களும் திரு.க.யோகநாதன் (தலைவர் - கல்வி,கலாசார பண்பாட்டு மையம் - மல்லாவி) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கெளரவ விருந்தினர்களாக
திரு.பொ.குகானந்தன் (பிரதம நிறைவேற்றுப் பொறியியலாளர் - வீதி அபிவிருத்தி அதிகார சபை - மாங்குளம்) அவர்களும் திரு.இரகுலேந்திரா (மின் அத்தியட்சகர் - மின்சாரசபை- மாங்குளம்) மற்றும் திரு.ந.ஸ்ரீஸ்கந்தராஜா (பிரதிப் பணிப்பாளர் - நீர்ப்பாசனத் திணைக்களம்- மாங்குளம்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

பான்ட் வாத்திய இசை முளங்க விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு கலாசார நிகள்வுகளுடன் நிகள்வு ஆரம்பமானது.

மாணவர்களின் அணிநடை, பரிசில் ,சான்றிதள், வெற்றிக்கேடையம் வழங்கல் என்பனவும் நடைபெற்றன.

நிகழ்வின் போது  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ வைத்தியக்கலானிதி சி.சிவமோகன் அவர்கள் வித்தியாலயத்தின் மைதான புனரமைப்பிற்காக ரூபா.1,000,000 (10 லடவசம்) வழங்கியமை குறிப்பிடத்தக்கது.








































முல்/மாங்குளம் ம.ம.வி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று (30/01/2019) சிறப்புற நடைபெற்றது!!! முல்/மாங்குளம் ம.ம.வி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று (30/01/2019) சிறப்புற நடைபெற்றது!!! Reviewed by Mankulam News on 1/30/2019 08:45:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.